வண்டிக்கு சார்ஜ் ஏத்த இனி வெயிட் பண்ண வேணாம்! இது வந்தா பெட்ரோல் பங்க் எல்லாம் மூடிட்டு தான் போகனும் போல!
சன் மொபிலிட்டி நிறுவனம் தனது ஸ்வாப் எக்ஸ் என்ற பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன், மற்றும் ஸ்மார்ட் பேட்டரி ஒன்றை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சன் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் எனர்ஜி கட்டுமானம் மற்றும் எலெக்ட்ரிக் வாகன சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம். இந்நிறுவனம் இன்று ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்வாப்எக்ஸ் என்ற தானியங்கி பேட்டரி ஸ்வாப்பிங் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போக இந்நிறுவனம் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் பேட்டரியான S2.1 என்ற பேட்டரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய தலைமுறையை விட 45 சதவீதம் அதிக ரேஞ்ச் மற்றும் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஸ்வாப் எக்ஸ்-யை பொருத்தவரை பிளக் அன் ப்ளே ஸ்வாப்பிங் தளமாக செயல்படும். குறிப்பாக ஒரே நேரத்தில் அதிமாக வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதை குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் தங்கள் கடையின் வாசலில் இதை வைத்துக்கொள்ள கூடிய அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிகமான இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை கொண்டு வர இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கருவியை இந்நிறுவனம் ஃபிரான்சஸீஸ் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த கருவி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் இடங்களின் எண்ணிக்கை பிரச்சனை மற்றும் சார்ஜ் ஏற்ற நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குகிறது.

ஸ்வாப் எக்ஸை பொருத்தவரை பல சிஸ்டம் கண்ட்ரோல்டு சென்சார்களுடன் கூடிய டிஸ்பிளே இருக்கிறது. இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் 3 ஆன்போர்டு கம்யூட்டர்கள் ஸ்மார்ட் கார்டு ரீடருடன் இணைக்கப்பட்டிருக்கும். இது போக ஸ்மோக டிடெக்ஷன், எலெக்ட்ரிக் ஷாக் புரோடெக்ஷன், மேம்படுத்தப்பட்ட தெர்மல் மேனேஜ்மென்ட், ஆன் போர்டு எஸ்ஓஎஸ் பட்டன், ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இதை வைக்க குறைவான இட வசதியே போதுமானது. அதே போல அதிக இட வசதிஇருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்டேஷன்களை இணைத்து செயல்பட வைக்கவும் முடிவும்.

அடுத்ததாக S2.1 பேட்டரியை பொருத்தவரை குறைந்த எடையை கொண்டது. மேலும் ஸ்மார்ட் மற்றும் ரோபஸ்ட் ஸ்மார்ட் பேட்டரியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பேட்டரி 2.1 கிலோ வாட் ஹவர் திறனை கொண்டது. இந்த பேட்டரிகள் கிளைவு கனெக்ட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இது போக பாதுகாப்பானது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி AIS156 சான்று பெற்றது.
இந்த பேட்டரி கிளைமேட், சைக்கிளிக், டிராப், வைப்ரேஷன், என மொத்தம் 450க்கும் அதிகமான பாதுகாப்பு மற்றும் ஃபெர்பாமென்ஸ் டெஸ்ட் செய்யப்பட்டது. இந்த பேட்டரி பல வாகனங்களில் ரியல் வேல்டு கண்டிஷனில் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பேட்டரியின் பாதுகாப்பை இந்நிறுவனம் உறுதி செய்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








