இளைஞர்களின் கனவு கன்னி சன்னி லியோனி இந்த காரையா வாங்கி இருக்காங்க!.. முரட்டு தனமான காராச்சே இது!
லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் நயன்தாராவை அறியாத இளைஞர்கள்கூட இந்தியாவில் இருப்பார்கள் என கூறிவிட முடியும். ஆனால், இந்தி நடிகை சன்னி லியோனியை அறியாதவர்களே இருக்க முடியாது என அடித்து கூறலாம். பதின் பருவ இளைஞர்களின் கனவு கன்னியே இந்த நடிகை ஆவார்.
நடிப்பில் மட்டுமல்ல சில பொது சேவைகள் வாயிலாகவும் இவர் அறியப்படுகின்றார். ஆகையால், இளைஞர்களுக்கு இவர் கொஞ்சம் ஸ்பெஷல் நடிகையாக ஆவார். இந்த நடிகையே புத்தம் புதிய மற்றும் பிரமாண்ட தோற்றம் கொண்ட கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் என்ன காரை வாங்கி இருக்கின்றார்?, அதன் சிறப்புகள் என்ன? மற்றும் விலை உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சன்னி லியோனி வாங்கி இருப்பது எம்ஜி குளோஸ்டர் லக்சூரி எஸ்யூவி ரக காராகும். இந்த நடிகை ஓர் மிகப் பெரிய மஸராட்டி கார் பிரியர் ஆவார். இவரிடம் இந்த பிராண்டின் கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் பிரமாண்ட மற்றும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட எம்ஜி குளோஸ்டர் காரை அவர் வாங்கி இருக்கின்றார்.
குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்களில் இதுவும் ஒன்றாகும். இட வசதியை மிக தாராளமாக இதில் பெற்றுக் கொள்ள முடியும். எம்ஜி குளோஸ்டர் கார் மாடலில் சன்னி லியோனி காட்சியளிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டில் வெள்ளை நிற குளோஸ்டரிலேயே அவர் காட்சியளித்தார்.

ஆனால், இப்போது அவர் பயன்படுத்தி இருப்பது முன்பு பயன்படுத்தியதில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கின்றது. கருப்பு நிற எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி காரிலேயே அவர் தற்போது காட்சியளித்துள்ளார். பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடலாக எம்ஜி குளோஸ்டர் காட்சியளிக்கின்றது. அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance System)கூட இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த தொழில்நுட்பம் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட், ஃபார்வார்டு கொள்ளிசன் வார்னிங் சிஸ்டம், லேன் டிபார்சர் வார்னிங் என எக்கசக்க வசதிகளை இந்த தொழில்நுட்பம் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தகைய சூப்பரான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காரையே நடிகை சன்னி லியோனி வாங்கி இருக்கின்றார். மேலும், அதில் அவருடைய பயணத்தையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமல்ல இன்னும் பல சூப்பரான வசதிகள் குளோஸ்டர் எஸ்யூவி காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட், பனோரமிக் சன்ரூஃப், 7 ஏர் பேக்குகள், டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை, பன்முக டிரைவிங் மோட், சாவியே இல்லாமல் ரைடு செய்யும் வசதி மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்டவையும் எம்ஜி குளோஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. 163 பிஎஸ் திறன் கொண்ட 2.0 லிட்டர் சிங்கிள் டர்போ டீசல் மற்றும் 218 பிஎஸ் திறன் கொண்ட 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் மோட்டார் என இரு விதமான எஞ்ஜின் தேர்வில் எம்ஜி குளோஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி குளோஸ்டர் ரூ. 38.08 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இத்தகைய அதிகபட்ச விலைக் கொண்ட லக்சூரி எஸ்யூவி காரிலேயே நடிகை சன்னி லியோனி தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கின்றார். சன்னி லியோனியின் பயன்பாட்டால் இந்த கார் ஒரு சிலரின் கனவு வாகனமாக மாறி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications








