மழை வெள்ளத்தில் இழக்கக் கூடாததை இழந்து தவிக்கும் நடிகை சன்னி லியோன்! இப்படி ஒரு சோகம் யாருக்குமே நடக்க கூடாது!
கார் வாங்குவது என்பது பலருக்கு பல நாள் கனவாக இருக்கின்றது. ஆனால், நடிகர்களுக்கு அது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. நினைச்ச உடனே விரும்பிய சொகுசு கார்களை அவர்களால் உடனே வாங்கிட முடியும். நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது கோடியில் புரளும் நடிகர்களைப் பற்றி.
அதேநேரத்தில், தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு புதிய வாகனமாக இருந்தாலும் அதை அசால்டாக விற்றுவிட்டும் அவர்கள் சென்றிடுவார்கள். அதேசமயத்தில் நடிகரிடம் இருந்து விற்பனைக்கு வரும் வாகனம் என்பதால் ஒரு சில நபர்கள் அதை கூடுதல் பிரீமியம் தொகைக் கொடுத்தும் வாங்க முன் வருவர்.

ஆகையால், எப்படி பார்த்தாலும் அவர்களுக்கு லாபமே. ஆனால், இதுபோல் எல்லாரும் செய்துவிடுவார்கள் என கூறிவிட முடியாது. ஒரு சில நடிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை தங்களின் குடும்ப உறுப்பினர்களைப் போல பார்ப்பார்கள். அப்படியான நடிகையாகவே பாலிவுட்டைச் சேர்ந்த சன்னி லியோன் இருக்கின்றார்.
இவர் ஆசை ஆசையாக வாங்கிய கார்கள் சிலவற்றை மழை வெள்ளத்தில் இழந்திருப்பதாக அதிர்ச்சியாதன தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகை தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றார். நடிப்பை போலவே அவருக்கு கார்கள் மீதும் அதிகம் ஆர்வம் என்பதால் சில அரிய வகை கார் மாடல்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே ஒட்டுமொத்தமாக தனக்கு பிடித்தமான மூன்று சொகுசு கார்களை மழை வெள்ளத்தினால் இழந்திருப்பதாக நடிகை சன்னி லியோன் மனம் திறந்து இருக்கின்றார். சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.
அவர் மழை வெள்ளத்தால் இழந்த மூன்று கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி ரக சொகுசு வாகனமும் அடங்கும். இந்த காரை இழப்பை அவர் பேரிழப்பாக கருதுகின்றனர். மேலும், அந்த சொகுசு காரை இழந்ததை நினைத்து பல நேரங்களில் தான் கண்ணீர் சிந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அளவிற்கு நடிகையின் பிரியமான காராக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் இருந்திருக்கின்றது. இந்த காருடன் சேர்த்தே மேலும் இரு மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்களையும் அவர் மழை வெள்ளத்தில் பறிகொடுத்திருக்கின்றார். இவற்றை இழந்த பின்னரே அவர் சாதாரணமான எம்ஜி குளோஸ்டர் கார் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார்.
எம்ஜி குளோஸ்டர் அதிக ஆடம்பர வசதிகள் எஸ்யூவி ரக காராகும். ரூ. 38.80 லட்சம் தொடங்கி ரூ. 43.16 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. அவர் இழந்த மூன்று கார்களைக் காட்டிலும் இது சற்று விலை குறைவுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. நடிகை சன்னி லியோன் மட்டுமல்ல இன்னும் பல கார் உரிமையாளர்கள் மழையில் தங்களின் கார்களை இழந்திருக்கின்றனர்.
குறிப்பாக, பெரும் வெள்ளத்தின்போது நிலத்தடி கராஜிக்குள் காரை நிறுத்தி வைத்திருந்த பலரும் தங்களின் வாகனத்தை இழந்தது உண்டு. இதனால்தான், மும்பை போன்ற ஒரு சில நகரங்களில் அந்நகர வாசிகள் கன மழையின்போது தங்களின் கார்களை மேம்பாலத்தின்மீது நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்களின் வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்திக் கொள்கின்றனர்.
ஆனால், வேறு வழியே இல்லாதவர்கள் மழை வெள்ளத்தில் தங்களின் கார்களை இழக்க நேரிடுகின்றனர். அப்படியாகவே நடிகை சன்னி லியோனும் இழக்கக் கூடாத மூன்று கார்களையும் இழந்து உள்ளார். அவரின் வீடு மழை பெய்தாலே பாதிப்பைச் சந்திக்கும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவே அவர் கார்களை இழக்கக் காரணமாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை வெள்ளத்தில் இருந்து உங்கள் கார்களை பாதுகாக்க பாதுகாப்பான பார்க்கிங் பகுதிகளை பயன்படுத்தலாம். மேலும், உயரமான பகுதிகளில் வாகனங்களைக் கொண்டு போய் நிறுத்தலாம். அதேவேளையில், காரில் உள்ள ஷார்ட் சர்க்யூட் ஆகக் கூடிய பொருட்களை மின்சார இணைப்பில் இருந்து துண்டிக்க வேண்டும். இதுபோன்ற டிப்ஸ்களை கையாண்டால் ஓரளவிற்கு மழையில் இருந்து உங்கள் வாகனத்தை காக்க முடியும்.


Click it and Unblock the Notifications
