சன்ரூஃப் வச்ச கார வாங்குறது பெருசு கெடயாது.. அத பத்திரமா பாத்துக்கணும்! இல்லனா உள்ள தண்ணி பிச்சிட்டு ஊத்தும்!
ஆரம்பத்தில் சொகுசு மற்றும் பிரீமியம் தர கார்களில் மட்டும் வழங்கப்பட்ட அம்சமே சன்-ரூஃப் (Sun Roof). இப்போது இந்த அம்சம் மாஸ் மார்க்கெட்டிற்குள் நுழைந்திருக்கின்றது. அதாவது, ஆரம்ப நிலை கார் மாடல்களின் உயர்நிலை வேரியண்டுகளிம் சன்ரூஃப் அம்சம் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
இந்த அம்சம் தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வழங்கும். சன்ரூஃப் வாயிலாக பயணங்களின்போது வாண்வெளியை ரசித்த வண்ணம் மேற்கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே பலர் தற்போது சன்ரூஃப் அம்சம் கொண்ட காரை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் ஆரம்ப நிலை கார் மாடல்களிலும் சன்ரூஃப் அம்சத்தை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த அம்சத்தை எப்படி பாதுகாப்பது மற்றும் எப்படி எப்போதும் இயக்க நிலையில் வைத்திருப்பது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, சன்ரூஃப் பராமரிப்பு டிப்ஸையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றவும்:
முதலும் மிகவும் முக்கியமான ஓர் அறிவுரை யாதெனில் உங்கள் வாகனத்தை தயாரித்த நிறுவனம் வழங்கிய அனைத்து முக்கிய அறிவுரைகளையும் அறிந்துக் கொள்வதாகும். இந்த செயல் சன்ரூஃப் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல உங்களுடைய ஒட்டுமொத்த கார் பயன்பாட்டிற்கும் தேவையானது. யூஸர் மேனுவல் (பயன்பாட்டாளர்) கையேட்டில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து வழிக்காட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

இதன் வாயிலாக வாகனத்தை மட்டுமல்ல சன்ரூஃபையும் எப்போதும் புதிதுபோல் வைத்திருக்க முடியும். மேலும், அதன் இயக்க நிலையில் எந்த பாதிப்பும் வராமல் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். குறிப்பாக, பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கலை நம்மால் தவிர்த்துவிட முடியும். இதுதவிர சரியான வழிகளில் சன்ரூஃபை பயன்படுத்தவும் அது வழிகாட்டும்.
சுத்தமாக வைத்திருத்த வேண்டும்:
ஒருவேளை உங்களுடைய காரை வெளிப்புறத்தில் (மரத்தின் கீழோ அல்லது திறந்த வெளியில்) நிறுத்துபவராக நீங்கள் இருந்தால், கட்டாயம் நீங்கள் உங்களது காரின் சன்ரூஃபை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம் ஆகும். குறிப்பாக, தூசி மற்றும் காய்ந்த மர இலைகள் உள்ளிட்டவை மேற்கூரை மீது சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால் சன்ரூஃபில் ஏற்படும் சிறு சிறு சிராய்ப்புகளை போக்க முடியும்.

இதனை தவிர்க்க பாதுகாப்பான பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்தலாம். அல்லது, கார் போர்வைக் கொண்ட வாகனத்தை முழுமையாக கவர் செய்து வைக்கலாம். இவ்வாறு செய்வதன் வாயிலாக காரில் தூசி மற்றும் மரக் கிளைகள்-இலைகள் உள்ளிட்டவற்றினால் ஏற்படும் கீரல்களில் இருந்து காப்பாற்ற முடியும். மேலும், புதிது போல் வைத்திருக்கவும் உதவியாக இருக்கும். அதேவேளையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதற்கென தனியாக நேரம் ஒதுக்கு ஸ்கிராட்சுகள் ஏற்படுத்தாத ஃபைபர் துணியைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.
பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம்
சன்ரூஃப் தேவைப்படவில்லை என நினைத்து அதை அப்படியே பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டாம். அதனை அவ்வப்போது பயன்படுத்துங்கள். இதன் வாயிலாக எப்போதும் சன்ரூஃபை இயக்க நிலையில் வைத்திருக்க முடியும். பயன்படுத்தாமலே விடுவதனால், சில நேரங்களில் சன்ரூஃப் பழுதடைய நேரிடலாம். தேவைப்படும் நேரங்களில் அதை திறக்க முடியாமல் போகலாம். எனவேதான் அடிக்கடி பயன்படுத்தி சன்ரூஃபின் இயக்க நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.

சுமைகளை திணிப்பதை தவிர்க்கவும்
அண்மையில் ஓர் சிறிய நீர் வீழ்ச்சியின்கீழ் நின்ற மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் சன்ரூஃப் பழுதுற்று அதன் வழியாக நீர் உள்ளே வர தொடங்கியது. இவ்வாறு, தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. சன்ரூஃப் மீது அதிக பாரத்தை ஏற்றுவது அல்லது வேறு ஏதேனும் தேவையற்ற செயல்களை செய்வது அதை விரைவில் பழுதாக செய்யும். இதற்கு உதாரணமாகவே ஸ்கார்பியோ என் சன்ரூஃப் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
பழுதாகி இருந்தால் உடனடியாக சரி செய்யவும்
சன்ரூஃப் சில நேரங்களில் தானாகவே பழுதாக நேரிடும். இதுமாதிரியான கோளாறுகளை உடனடியாக சரி செய்வதே நல்லது. நாளாக நாளாக இந்த சிக்கல் அதிகமாக மட்டுமே செய்யும். குறிப்பாக, மழை காலங்களில் அதில் ஏற்படும் கோளாறும் மிகப் பெரிய சிக்கல்களுக்கு வழி வகுக்கும். எனவேதான் சன்ரூஃபில் ஏதேனும் பிரச்னைக் கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக சரி செய்துவிடுவதே நல்லது. இதன் வாயிலாக சிக்கல் மேலும் மோசமாவதை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









