தலைவரு தாடியை தேயி தேயினு தேய்ச்சுட்டாரு.. அவ்ளோ காஸ்ட்லியான காரை கொடுத்து அசத்திட்டாங்க! காரா இல்ல கப்பலா...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் தற்போது வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கின்றது. பாக்ஸ் ஆஃபிசில் ஹிட் அடித்த படங்களான புஷ்பா மற்றும் விக்ரம் உள்ளிட்டவற்றையே வசூலில் இது துவம்சம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ரஜினி நடித்த படம் என்றாலே போட்டா காசைவிட அதிக பணத்தை எடுத்துவிட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், ஜெயிலர் கண்டிருக்கும் வசூலானது இமாலய அளவிலானதாக இருக்கின்றது. 600 கோடியைத் தாண்டி வசூல் வேட்டையை இந்த படம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது.

இந்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்தே ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில், கலாநிதி மாறன் விலையுயர்ந்த சொகுசு காரை ரஜினிக்கு பரிசாக வழங்க இருக்கின்றார். சொகுசு கார் பரிசளிப்பது என்பது பாலிவுட் போன்ற குறிப்பிட்ட திரையுலகில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்தது.
தற்போது, சொகுசு கார் பரிசளிப்பு தென்னிந்திய திரையுலகிலும் பரவத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, விக்ரம் திரைப்பட வெற்றியை முன்னிட்டு அப்படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜிக்கு நடிகர் கமல் மிக மிக விலையுயர்ந்த லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். இது தமிழ் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையிலேயே, தற்போது ரஜினிக்கு கார் பரிசளிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) சொகுசு காரே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடலாக இந்த கார் மாடலே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய ஓர் கார் மாடலையே கலாநிதி மாறன் ஜெயிலர் பட வெற்றிக்காக அப்படத்தில் முன்னணி ரோலில் நடித்த ரஜினிக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். ஒட்டுமொத்தமாக இரண்டு சொகுசு கார்களை ரஜினி தேர்வு செய்து கொள்ளும் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இந்த இரண்டில் எந்த காரை அவர் தேர்வு செய்தால் என்பது தெரியவில்லை.

இந்த காரின் ஒற்றை யூனிட்டின் விலை மட்டுமே 1.24 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. திரைப்படத்தை இயக்கிய நெல்சனுக்கு சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து வந்தநிலையில், ரஜினிக்கு காரை பரிசளித்து தயாநிதி மாறன் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.
அதேவேளையில், இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நெல்சனுக்கும் விரைவில் சொகுசு கார் பரிசளிக்கப்பட இருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அண்மையில், இயக்குநர் நெல்சனை அழைத்த கலாநிதி மாறன், அவரிடம் எட்டு கார்களைக் கொடுத்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும்படி கூறியதாகவும், அதில் ஒன்றை தேர்வும் செய்யும்படி கூறியதாகவும் கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் நெல்சனுக்கு கலாநிதி மாறன் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், விரைவில் நெல்சனுக்கு வழங்கப்பட உள்ள கார் பற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டு இருக்கும் சொகுசு கார் தொழில்நுட்ப வசதிகளும், லக்சரி அம்சங்களும் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக அதன் முகப்பு பகுதியில் லேசர் ரக ஹெட்லேம்ப் பிஎம்டபிள்யூ பயன்படுத்தி இருக்கின்றது. அதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், தானாகவே பார்க் செய்யும் வசதி மற்றும் 3 வரிசைகளிலும் சாய்ந்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை என ஏகப்பட்ட சொகுசு வசதிகளையும் இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 தாங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, காரில் டிராவல் செய்யும்போது ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது, பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஐ-டிரைவ் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல், கிரிஸ்டல் எஃபெக்ட் கியர் லிவர் மற்றும் குரல் கட்டளை வசதி உள்ளிட்டவற்றையும் எக்ஸ்7 பெற்றிருக்கின்றது.
எஞ்ஜினை பொருத்தவரை எக்ஸ்7 சொகுசு காரில் இரு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் இன்-லைன் ஆறு சிலிண்டர் இரட்டை-டர்போ டீசல் மோட்டார் ஆகிய தேர்வுகளே வழங்கப்படுகின்றன. இந்த இரண்டில் எந்த மோட்டார் கொண்ட காரை ரஜினி பரிசாக பெற்றிருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை.
இரண்டும் அதிக திறனை வெளியேற்றக் கூடியவையாக இருக்கின்றன. முதல் ஒன்று 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அடுத்ததாக பார்த்த மோட்டார் 260 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த இரு மோட்டார்களிலும் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடிகர்களுக்கு கார் பரிசளிக்கும் கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பாலிவுட் திரையுலகில் இருந்து தற்போது தென்னிந்திய திரையுலகிற்கும் இந்த கலாச்சாரம் பரவ தொடங்கி இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் மாமன்னன் படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜிக்கு மினி கூப்பர் சொகுசு காரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட்ஸ் வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
