சிங்கி-மிங்கி வாங்கிய பென்ஸ் காரோட விலை இவ்ளோ அதிகமா?.. இவ்ளோ காசு எங்கே இருந்துங்க வந்துச்சு!

வலைதள செலிபிரிட்டிகளான சிங்கி, மிங்கி இரட்டையர்கள் மிக மிக விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றனர். அப்படி என்ன காரை அவர்கள் வாங்கி இருக்கின்றனர் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சமூக வலைதளங்களினால் செலிபிரிட்டியாக மாறியவர்கள் சிங்கி-மிங்கி. இவர்களின் உண்மையான பெயர் சுரபி மற்றும் சமிரிதி ஆகும். யுட்யூப் மற்றும் இன்ஸ்டா ஆகியவற்றில் இந்த இளம்பெண்களுக்கு ஃபாலோவர்கள் மிக மிக அதிகம். இந்த நபர்களே சமூக வலைதளத்தினால் கிடைத்த வருமானத்தை வைத்து மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஸ்டா

பென்ஸ் நிறுவனத்தின் அதீத சொகுசு வசதிகள் நிறைந்த காரையே சிங்கி, மிங்கி வாங்கி இருக்கின்றனர். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 (Mercedes-AMG GLC 43) ஆடம்பர காரையே இரட்டையர்கள் வாங்கி இருக்கின்றனர். இதன் விலை ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆன்-ரோடில் இதன் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காரையே சிங்கி, மிங்கி வாங்கி இருக்கின்றனர். இவர்களின் இந்த கொள்முதல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரையும் ஆச்சரியமடைய செய்திருக்கின்றது. குறிப்பாக, சிங்கி-மிங்கியின் ஃபாலோவர்கள் இந்த கார் கொள்முதல்குறித்த தகவல் அறிந்து திகைத்து போயிருக்கின்றனர்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43, மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட சொகுசு காராகும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் கார் பயணிக்க வேண்டும் என்பதற்காக 3.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 4.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது மட்டுமல்ல அதீத தொழில்நுட்பம் மற்றும் லக்சூரி அம்சங்களைக் கொண்டதும்கூட. இந்த காரில் இரண்டு விதமான திரைகளை மெர்சிடிஸ் வழங்கி இருக்கும். ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் ஆகவும் செயல்படும்.

இன்ஸ்டா

முதல் ஒன்று 12.3 அங்குலம் கொண்டதாகவும், இரண்டாவது திரை 10.25 இன்ச் கொண்டதாகவும் இருக்கும். இன்ஃபோடெயின்மென் சிஸ்டத்தின் பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்காக அந்த திரையில் எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பத்தை மெர்சிடிஸ் வழங்கி இருக்கின்றது. இந்த திரைகளுடன் சேர்த்து பிரீமியம் தர அம்சமாக லெதரால் ஆன பக்கெட் ரக இருக்கை அதிக சொகுசு தன்மையுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ஃபிளாட் பாட்டம் ரக ஸ்டியரிங் வீல், அலுமினியம் ஸ்டைலிலான பேடில் ஷிஃப்டர்கள், பேன்-அமேரிக்கானா க்ரில், சைடு ஸ்கர்ட், குவாட் -பைப்பட் எக்சாஸ்ட்டுகள், ரியர் டிஃப்யூசர் மற்றும் ஸ்போர்ட்டி லுக்கிலான அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இன்ஸ்டா

ஆகையால், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 அழகிலும், எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டிலும், சொகுசு வசதிகளிலும் மிகவும் சூப்பரான காராக காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே சிங்கி-மிங்கியும் வாங்கியிருக்கின்றனர். இந்த காரை இன்னும் பல பாலிவுட் திரை நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 அதிக வேகத்தில் ஓடக் கூடிய, ஆடம்பர வசதிகள் கொண்ட காராகும். எனவேதான் பலர் இந்த கார் பலரின் பிரியமான காராக காட்சி அளிக்கின்றது. ஆனால், இதன் அதீத விலை குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய காராக மாற்றி இருக்கின்றது. இத்தகைய ஓர் காரை இரட்டையர்கள் வாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

Article Published On: Monday, March 27, 2023, 15:12 [IST]
English summary
Surabhi samriddhi takes delivery mercedes amg glc 43
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+