மாருதியோட சாம்ராஜ்ஜியமே அழியப்போகுது! ஸ்கோடா சொன்ன இந்த விஷயம் தான் இப்ப பத்திகிட்டு எரியுது!

ஸ்கோடா நிறுவனம் இந்திய மக்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்காக சமீபத்தில் என்ஐக்யூ பேசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய மக்களே ஆச்சரியப்படும் பல முக்கியமான உண்மைகள் தெரிய வந்துள்ளது. இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் உள்ள கார் வாங்கும் மனநிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்படிப்பட்ட காரை வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஒரு பிரத்தியேக ஆய்வு ஒன்றை நடத்தியது.

skoda survey

என்ஐக்யூ பேசஸ் என்ற நிறுவனம் இந்த ஆய்வுகளை ஸ்கோடா நிறுவனத்திற்காக நடத்திக் கொடுத்தது. இந்த ஆய்வில் மக்கள் புதிதாக ஒரு காரை வாங்கும் போது எதையெல்லாம் மனதில் வைத்து வாங்குவார்கள் என்பதை பொறுத்து கேள்விகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பதில் வாங்கப்பட்டது.

இந்த சர்வேயில் ஒரு முக்கியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய மக்களின் 10ல் 9 பேர் புதிதாக கார் வாங்கும் போது பாதுகாப்பு குறித்து தான் அதிகம் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். அதிகமானவர்கள் கார் எவ்வளவு கிராஷ் ரேட்டிங் பெற்றுள்ளது என்பதை பார்த்து தான் காரை வாங்கும் முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

skoda survey

காரை வாங்கும் முடிவை எடுப்பதில் கிராஷ் டெஸ்ட்-க்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது காரில் இருக்கும் ஏர் பேக்குகளின் எண்ணிக்கை ஆகும். அதிக ஏர் ஏர் பேக்குகள் கொண்ட கார்களையே மக்கள் விரும்புகின்றனர். மூன்றாவது இடத்தில் தான் காரின் மைலேஜ் என்ற விஷயம் வருகிறது. இந்தியாவில் மைலேஜ் காரர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த மனநிலை மாறி உள்ளதாக தெரிகிறது.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில் 67% ரூ5 லட்சத்திற்கும் அதிகமான விலை மதிப்பு கொண்ட கார்களை வைத்திருப்பவர்கள் தான். மீதமுள்ள 33 சதவீதமான மக்கள் அடுத்த ஓராண்டிற்கு ரூ 5 லட்சத்திற்கும் அதிகமான காரை வாங்கும் மன நிலையில் இருப்பவர்கள்.

skoda survey

இந்த சர்வேயில் 18 முதல் 54 வயதுடைய நபர்கள் தான் பங்கேற்றனர். அதில் 80 சதவீதம் ஆண்கள் தான், 20 சதவீதம் தான் பெண்கள். முன்னரே சொன்னபடி பெரும்பாலான மக்கள் காரின் கிராஷ் டெஸ்டை தான் அதிகம் விரும்பினார் மொத்தம் பதிலளித்தவர்களில் 22.3% இந்த ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர்.

அடுத்ததாக ஏர்பேக்கை பொறுத்தவரை 21.6% தேர்வு செய்துள்ளனர். 15 சதவீத மக்கள் தான் மைலேஜ் ஒரு அம்சமாக தேர்வு செய்துள்ளனர். இதில் கிராஷ்டெஸ்டை பொருத்தவரை 22.2 சதவீதமான மக்கள் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட காரையே வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 21.3 சதவீதமான மக்கள் 4 ஸ்டாருக்கு மேல் இருந்தாலே வாங்கலாம் என தெரிவித்துள்ளனர். வெறும் 6.8 சதவீதமான மக்கள் தான் 0 ஸ்டார் இருந்தாலும் வாங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஒரு சர்வேயில் ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. இந்த சர்வே எடுத்ததில் 76 சதவீதமான இந்தியர்கள் மத்தியில் 5 ஸ்டார் ரேட்டிங் பெறுவதில் இரண்டு விதமான டெஸ்ட் இருப்பது அவர்களுக்கு தெரிகிறது. அதே நேரம் வெறும் 30 சதவீதமான இந்திய மக்களுக்கு தான் காரின் பின் சீட்டில் குழந்தைகளை அமர வைத்து கிராஷ் டெஸ்ட் எடுப்பது குறித்த விழிப்புணர்வு இருக்கிறது.

இந்திய கார்கள் பெரும்பாலும் குளோபல் என் கேப்பிலேயே பங்கேற்கின்றன. அங்கு பெரியவர்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு என இரு பிரிவுகளாக டெஸ்ட் செய்யப்படுகிறது. இப்படியாக டெஸ்ட் செய்யப்படும் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் பொறுத்துதான் அதற்கான ஸ்டார் ரேட்டிங் வழக்கப்படுகிறது. இது தான் வாகனத்தின் தரத்தை குறிக்கிறது.

இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 குளோபல் என் கேப் ரேட்டிங் பெற்ற கார்களின் பட்டியல் இது உங்களுக்காக:

1. ஸ்கோடா குஷாக்
2. ஃபோக்ஸ்வேகன் டைகுன்
3. ஸ்கோடா ஸ்லாவியா
4. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்
5. மஹிந்திரா எக்ஸ்யூவி 700
6. மஹிந்திரா ஸ்கார்பியோ-என்
7. டாடா பஞ்ச்
8. மஹிந்திரா எக்ஸ்யூவி 300
9. டாடா அல்ட்ராஸ்
10. டாடா நெக்ஸான்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கான வரவேற்பு அதிகமாகி வருகிறது. இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான் மாருதி போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பைவிட விலை மற்றும் மைலேஜில் தான் அதிகமாக கவனம் செலுத்துகிறது. இந்த சர்வே முடியவிற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளையே மாற்ற வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 22:03 [IST]
English summary
Survey says 92 percent of indians prioritize safer cars over fuel efficiency
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X