ரொம்ப நாள் கழிச்சு டிரெண்ட் ஆகுராங்க... அதுக்கு இந்த கார்தான் காரணம்!

பிரபல இந்தி பட நடிகையான சுஷ்மிதா சென் விலையுயர்ந்த காரை வாங்கிய இந்தியா அளவில் டிரெண்டாக தொடங்கி இருக்கின்றார். அப்படி என்ன சொகுசு காரை அவர் வாங்கி இருக்கின்றார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்-ஐ நம்மில் பலர் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். ஒருவேளை அவரை நீங்கள் மறந்திருப்பீர்கள் எனில், ரட்சகன் படம் நினைவிருக்கின்றதா?, அந்த படத்தில், ஹீரோயினாக நடித்தவரே சுஷ்மிதா சென். 90-களில் மிகவும் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதுமட்டுமில்லைங்க 1994 இல் மிஸ் இந்தியா மற்றும் பிரபஞ்சத்தின் பேரழகி என்கிற பெருமைமிகு மகுடங் (விருது)களைச் சூடியவராகவும் அவர் இருக்கின்றார்.

சுஷ்மிதா சென்

டிவி ஷோவில் ஆதிக்கம் அதிகம்

இவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் பெரியளவில் நடிப்பதில்லை. கௌரவ நட்சத்திரமாகவே மட்டுமே தோன்றி வருகின்றார். அதுவும் ஒரு சில படங்களில் மட்டுமே தோன்று வருகின்றார். அதேவேளையில் டிவி ஷோ மற்றும் வெப் சீரிஸ்களில் அதிகளவில் அவர் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றார். இருப்பினும், சுஷ்மிதா சென் டிரெண்டில் இல்லாத சூழலே தென்படுகின்றது. இந்த நிலையையே அவர் வாங்கியிருக்கும் புதிய கார் மற்றி இருக்கின்றது.

விலை நாம நினைக்கிறதவிட ரொம்ப அதிகம்

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் நாடு தழுவிய அளவில் அவர் டிரெண்டாக தொடங்கி இருக்கின்றார். லேட்டஸ்டாக அவர் வாங்கிய சொகுசு வசதிகள் நிரம்பிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே ரக சொகுசு காரே இதற்கு காரணம் ஆகும். ஆமாங்க, இந்த காரையே அவர் சுஷ்மிதா சென் தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த காரின் விலை ரூ. 1.60 கோடிக்கும் அதிகமாகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த காரை வாங்கியதனாலேயே சுஷ்மிதா சென் டிரெண்டாக தொடங்கி இருக்கின்றார். இந்த சொகுசு வாகனம் அதிக லக்சூரி அம்சங்களுக்கு மட்டுமில்லைங்க, அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர்போனதாக இருக்கின்றது. எனவேதான் உலக அளவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எஞ்ஜின் விபரம்

மெர்சிடிஸ் நிறுவனம் இந்த வாகனத்தில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர், ட்வின் ரக டர்போ பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 429 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதில், 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது காரின் அனைத்து வீல்களுக்கும் இயக்க பவரை கடத்துகின்றது. இது ஓர் சொகுசு எஸ்யூவி ரக காராகும்.

சுஷ்மிதா சென்

மீண்டும் மீண்டும் ஓட்ட தோன்றும்

இந்த காரில் பல்வேறு லக்சூரி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வழங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அம்சங்களும் மீண்டும் மீண்டும் பயணத்தை மேற்கொள்ளும் ஆவலைத் தூண்டக் கூடியதாக இருக்கின்றன. குறிப்பாக, இந்த கவர்ச்சியான தோற்றம் அடிக்கடி பயன்படுத்த தூண்டும் வகையில் இருக்கின்றது. கூபே தோற்றத்துடன் சேர்த்து காருக்கு ஸ்போர்டி லுக்கை வழங்கும் விதமாக வீலீ, கட்டுமஸ்தான உடல் தோற்றம், ஸ்போர்ட்ஸ் டைப் இருக்கை, ஸ்டியரிங் வீல் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம் என பல அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சிறப்பு வசதிகள் மிக தாராளம்

இதுதவிர, ஸ்போர்ட்ஸ் ட்யூன்ட் சஸ்பென்ஷனும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் பிரீமியம் தர அம்சங்களாக ஹெட்-அப் திரை, நான்கு ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 13 ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் பக்க இருக்கை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 64 கலர்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், 4 ஜோன் க்ளைமேட் கனட்ரோல், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், பவர்டு டெயில்கேட் போன்றவையும் சொகுசு காரில் வழங்கப்பட்டு உள்ளன.

வேகம் உச்சபட்சம்

இத்துடன், பிளாக் மற்றும் பீஜ் ஆகிய ட்யூயல் டோன் நிறத்தினாலான இருக்கை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே காரில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் இடம் பெற்றிருக்கும் மோட்டார் வெறும் 5.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது கூடுதல் கவனிக்கத்தக்க தகவல் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sushmita sen buys mercedes amg gle 53 coupe
Story first published: Monday, January 23, 2023, 16:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X