மாருதிக்கே இந்த விஷயத்தில் தண்ணி காட்டும் டாடா மோட்டார்ஸ்!! கார்கள் விற்பனையில் முதலிடம் இதுக்கு தான்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் சிறப்பாக இருந்துவரும் நிலையில், கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் அதிகளவில் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட டாப்-10 கார்களை, அவற்றின் 2022 அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டு இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள், செய்திக்குள் போவோம்.

நம் இந்தியாவில் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாத விற்பனையிலும் டாடா நெக்ஸான் தான் எஸ்யூவி கார்களை பொறுத்தவரையில் முதலிடத்தில் உள்ளது.

suv cars sales report october

கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 16,887 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் 13,767 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், 2022 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் நெக்ஸான் கார்களின் விற்பனை ஆனது 22.66%, அதாவது 3,120 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

டாடா நெக்ஸானை தொடர்ந்து, இந்த வரிசையில் 2வது இடத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 16,050 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 9,941 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, பிரெஸ்ஸா கார்களின் விற்பனை ஆனது 61.45% அதிகரித்துள்ளது.

suv cars sales report october

டாடா பஞ்ச் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 15,317 பஞ்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனையும் 2022 அக்டோபரை விட 39.47% உயர்ந்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 10,982 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

4வது இடத்தை மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார்கள் பிடித்துள்ளன. கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 13,578 ஆகும். ஆனால், 2022 அக்டோபரில் வெறும் 7,438 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது டபுளாக அதிகரித்துள்ளது.

suv cars sales report october

மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார்களாக ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. 5வது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா 13,077 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2022 அக்டோபரிலோ 11,880 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 6வது இடத்தை கியா செல்டோஸ் தனதாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 12,362 செல்டோஸ் கார்களை கியா விற்பனை செய்துள்ளது.

2022 அக்டோபரில் செல்டோஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 9,777 மட்டுமே ஆகும். இதற்கடுத்து, 7வது மற்றும் 8வது இடங்களில் ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 11,581 மற்றும் 11,357 ஆகும். கடைசி 9வது மற்றும் 10வது இடங்களில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (10,834) மற்றும் மஹிந்திரா பொலேரோ (9,647) உள்ளன.

suv cars sales report october

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, கார்கள் விற்பனை என்றாலே, மாருதி சுஸுகியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். இந்த டாப்-10 எஸ்யூவி கார்களிலும் 3 மாருதி சுஸுகி கார்கள் உள்ளன. ஆனால், முதல் 3 இடங்களில் 2 டாடா கார்கள் இருப்பது, சமீப காலத்தில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 8:52 [IST]
English summary
Suv cars sales report 2023 october check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X