கோடி கணக்கில் முதலீடுகள் வீண்... இந்தியாவில் தோல்வியடைந்த 6 வெளிநாட்டு எஸ்யூவி கார்கள்!!

நமது இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டு சாலைகளில் ஒரு காலத்தில் செடான் ரக கார்களே அதிகளவில் இயங்கி வந்தன. ஆனால் இன்றோ உயரமான & கம்பீரமான உடலமைப்பை கொண்ட எஸ்யூவி ரக கார்களையே அதிகம் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு சமீப காலங்களில் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்தாலும், நம் நாட்டு சந்தையில் சில நிறுவனங்களின் எஸ்யூவி கார்கள் மக்களின் கவனத்தை பெறாமல் விடைப்பெற்று சென்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ரெனால்ட் கேப்ச்சர் (Renault Captur): இந்தியாவில் பல ரெனால்ட் கார்கள் வெற்றியை பெறாமல் நடையை கட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று கேப்ச்சர் ஆகும். தற்சமயம் விற்பனையில் இருக்கும் ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி காரின் விலைமிக்க பிரீமியம் வெர்சனாக கேப்ச்சர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த எஸ்யூவி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டன.

suv cars which failed in indian market

நிஸான் கிக்ஸ் (Nissan Kicks): ஜப்பானிய ஸ்டைலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காராக இருப்பினும் கிக்ஸ் காரால் இந்திய சந்தையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரெனால்ட்டும், நிஸானும் கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில், பல்வேறு கார்களை இரு நிறுவனங்களும் உருவாக்கி உள்ளன. அந்த வரிசையில், கேப்ச்சரை உருவாக்க பயன்படுத்தப்பட்ட அதே பி0 பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் கிக்ஸ் உருவாக்கப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டூவரெக் (Volkswagen Touareg): வெளிநாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதுண்டு. ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து வாடிக்கையாளர்களை அதிகம் பெற்ற கார்களுள் ஒன்று டூவரெக் ஆகும். ஆனால் இந்த காரை இந்தியர்கள் கடைசி வரையில் கண்டுக்கொள்ளவே இல்லை. இதற்கு முக்கிய காரணம், டூவரெக்கின் அதிகப்படியான விலை ஆகும்.

suv cars which failed in indian market

செவ்ரோலெட் டிரைல்பிளாஸர் (Chevrolet Trailblazer): 2017ஆம் ஆண்டில் செவ்ரோலெட் நிறுவனம் இந்தியாவில் இருந்து மூட்டை, முடிச்சுகளை கட்டிக்கொண்டு நடையை கட்டுவதற்கு முன்பு கடைசியாக பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் டிரைல்பிளாஸர் ஆகும். டூவரெக்கை போல், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரபலமாக இருந்த டிரைல்பிளாஸர் காரை மிகுந்த நம்பிக்கை உடன் இந்தியாவில் செவ்ரோலெட் களமிறக்கியது. ஆனால் ரிசல்ட் கிடைக்கவில்லை.

பிரீமியர் ரியோ (Premier Rio): பிரீமியர் கார் நிறுவனத்தை பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பத்மினி என்ற பிரபலமான காரை உருவாக்கிய நிறுவனம் இது. ஆனால் பிரீமியர் ரியோ காரின் பெயரை கூட பலர் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் சப் காம்பெட் எஸ்யூவி காராக விளங்கிய பிரீமியர் ரியோ ஆனது ஸோட்யே 2008 என்ற சீன காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் ஆகும்.

suv cars which failed in indian market

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா 4x4 (Maruti Suzuki Grand Vitara 4x4): மாருதி சுஸுகியில் இருந்து தோல்வியுற்ற மிகவும் சில கார்களுள் ஒன்று கிராண்ட் விட்டாரா ஆகும். கிராண்ட் விட்டாரா என்றவுடன், தற்சமயம் விற்பனையில் இருக்கும் கிராண்ட் விட்டாரா கார் உடன் குழப்பி கொள்ள வேண்டாம். ஏனென்றால், இது பழைய கிராண்ட் விட்டாரா ஆகும். இத்தனைக்கும், பழைய கிராண்ட் விட்டாரா கார் 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என்ற ஆற்றல்மிக்க என்ஜின் உடன் 4-வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்ட காராக விளங்கியது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த லிஸ்ட் இத்தோடு நின்று போகவில்லை. ஹூண்டாய் டெர்ராகன், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஃபோர்ஸ் ஒன் என சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் பெரும்பான்மையானவற்றின் தோல்விக்கு முக்கிய காரணம், அவற்றின் அதிகப்படியான விலை ஆகும். அதாவது, நம் இந்தியர்களுக்கு இவற்றின் விலைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில எஸ்யூவி கார்களால் நம் நாட்டு சாலைகளை கையாள முடியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 21:59 [IST]
English summary
Suv cars which failed in indian market
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X