எஸ்யூவி கார்ன்னு பேர் வச்சதெல்லாம் உண்மையான எஸ்யூவி கிடையாது! உண்மையான எஸ்யூவி எப்படி இருக்கும் தெரியுமா?
இன்று மார்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு மவுசு இருக்கிறது. ஆனால் மார்கெட்டில் எஸ்யூவி என்ற பெயரில் விற்பனையாகும் பல கார்கள் உண்மையிலுமே எஸ்யூவி கார்கள் இல்லை எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? எஸ்யூவி கார்கள் என்றால் என்ன? மார்கெட்டில் எஸ்யூவி காருக்கும் மற்ற காருக்கும் என்ன வித்தியாசம் எனக் காணலாம் வாருங்கள்.
இன்று எஸ்யூவி கார்களுகு்கு மவுசு அதிகமாகிவிட்டது. ஏராளமான மக்கள் எஸ்யூவி கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்களும், போட்டிப் போட்டு பல்வேறு செக்மெண்ட்களில் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மைக்ரோ எஸ்யூவி, மினி எஸ்யூவி, காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, முழு சைஸ் எஸ்யூவி எனப் பல வகையான எஸ்யூவிகள் உள்ளது.

முதலில் எஸ்யூவி என்றால் என்ன எனப் பார்க்கலாம். ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் என்பதன் சுருக்கமே எஸ்யூவி. அதாவது விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு உபகரணங்களை ஏற்றிச் செல்லும் அளவிற்குப் பெரிய பூட் வசதி கொண்டு தயாரிக்கப்பட்ட கார் தான் இது. மேலும் இது ஆஃப்ரோடிங் அம்சங்களுடனும் இருக்கும். ஸ்போர்ட்ஸ் பொருட்களிலேயே நீளமானது கோல்ஃப் பேட் தான். இந்த காரில் ஒரு கோல்ஃப் பேட்டை வைக்கும் அளவிற்கு இடம் இருக்க வேண்டும் அது தான் எஸ்யூவி கார்.
இந்த எஸ்யூவி காருக்கும், சாதாரணமான காருக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசம் இருக்கும். ஒரு சாதாரண காரின் சேஸிஸ் என்பது லேசான இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் எஸ்யூவி காரின் சேஸிஸ் என்பது டிரக் வாகனத்தில் உள்ள சேஸிஸை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படும். ஆனால் இந்த மாதிரியாக டிரக் சேஸிஸ் இல்லாமல் அதே நேரம் எஸ்யூவி ஸ்டைலில் உருவாக்கப்படும் கார்கள் கிராஸ் ஓவர் கார்கள் என அழைக்கப்படும்.

கிராஸ்ஓவர் காரை பொருத்தவரை அதன் சேஸிஸ் சிங்கிள் பிரேமில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் சேஸில் வடிவமைக்கப்படும் போதே சிறப்பான ரைடு குவாலிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும். அதிக மைலேஜ் கார் வழங்க வேண்டும் என்பதற்காக குறைவான எடையில் இது உருவாக்கப்பட்டிருக்கும்.
இதுவே எஸ்யூவி கார் என்றால் சேஸிஸ் தனியாகவும் பிரேம் தனியாகவும் பிரித்து பிரித்து உருவாக்கப்படும். சேஸில் மீது பிரேம் அமரும் படி செட் செய்யப்படும். இதனால் அதிகமான எடையை இந்த வாகனத்தால் சுமந்து செல்ல முடியும். மேலும் இதன் ஃபெர்பாமென்ஸூம் ரக்கடாக இருக்கும் என்பதால் இதற்கு இந்த முறை செட்டப்தான் சிறந்ததாக இருக்கும்.

இப்படியாக டிரக் சேஸிஸ் கொண்ட எஸ்யூவி என்பது முழு சைஸ் எஸ்யூவி அல்லது மிட் -சைஸ் எஸ்யூவியாக தான் இருக்கும். ஆனால் கிராஸ் ஓவர் எஸ்யூவி என்பது சிறிய சைஸ் எஸ்யூவி முழு முதல் முழு சைஸ் எஸ்யூவி வரையிலான அளவுகளில் இதை உருவாக்க முடியும். அதனால் எஸ்யூவி கார்களை தேர்வு செய்யும் போது அதன் சேஸில் பற்றித் தெரிந்து கொள்வதுதான் நல்லது.
எஸ்யூவியோ அல்லது கிராஸ் ஓவர் எஸ்யூவியோ, அதன் அடிப்படை ஒன்றுதான். அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ், டிரைவருக்கு மற்ற கார்களை விட அதிக வேண்டேஜ் பாயிண்ட், அதிக உட்புற இட வசதி, குடும்பத்துடன் செல்ல மினி வேனிற்கு பதிலாக இந்த ரக காரை தேர்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்படும். இதன் பூட் அதிகமான பொருட்களை எடுத்த செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதே நேரம் எஸ்யூவி, கிராஸ் ஓவர் கார்கள் வடிவமைக்கப்படும் போதே பாதுகாப்பை அடிப்படையாக வைத்து வடிவமைக்கும். மேலும் ஆஃப்ரோடு அம்சங்களும் இடம் பெறும். இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினாலும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது தான் இந்த இரு கார்களுக்கும் உள்ள வித்தியாசம்
இந்தியாவில் கிராஸ் ஓவர் கார்கள் என்றால் கியா செல்டோஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, உள்ளிட்ட கார்கள் மார்கெட்டில் விற்பனையாகிறது எஸ்யூவி கார்கள் என்றால் டாடா ஹாரியர், டொயோட்டா ஃபார்ச்சூனர், கியா செல்டோஸ் ஆகிய கார்கள் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார் சிறப்பான அம்சங்களைக் கொண்டது என்றாலும் முழுமையான எஸ்யூவியை தயாரிக்க அதிகம் செலவாகும். அதனால் அதே அம்சங்களுடன் கிராஸ் ஓவர் கார் ஏழைகளுக்கான எஸ்யூவியாக உருவாக்கப்பட்டுள்ளது. கார் வாங்கும் முன் இந்த இரண்டிற்கும் வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்


Click it and Unblock the Notifications









