மாருதின்னா சும்மாவா? இத்தனை நாளா இந்த விஷயத்துல தான கிண்டல் பண்ணீட்டு இருந்தீங்க! இப்ப மாஸ் காட்டிருக்காங்க!

இந்தியாவில் விற்பனையாகும் 2ல் 1 கார் எஸ்யூவி காராக தான் இருப்பதாக கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் நீண்ட நாட்களாக எஸ்யூவி ரக கார்களுக்கு தான் மிகப்பெரிய அளவில் மவுசு இருக்கிறது. இந்த ரக கார்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாத கார் விற்பனை விபரங்கள் எல்லாம் வெளியாகியுள்ளது. இந்த ரிப்போர்ட்களை பார்க்கும் போது எஸ்யூவி ரக கார்கள் தான் இந்தியாவில் விற்பனையான கார்களில் 50 சதவீதத்தை பெற்றுள்ளது என்பது தெரிகிறது.

suv sales in july

அப்படி என்றால் இந்தியாவில் விற்பனையாகும் 2ல் 1 கார் இந்த எஸ்யூவி ரக காராக தான் இருக்கிறது.இந்த எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை மாருதி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தாத செக்மெண்டாக இந்த எஸ்யூவி செக்மெண்ட் தான் இருக்கிறது. ஆனால் தற்போது இந்த நிலைமை மாறி எஸ்யூவி செக்மெண்டிலும் மாருதி நம்பர் 1 இடத்தில் வந்துவிட்டது.

மாருதி சுஸூகி நிறுவனத்தை பொருத்தவரை எஸ்யூவி காரில் பிரெஸ்ஸா கார் தான் நம்பர் 1 இடத்தில் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 16,543 கார்கள் விற்பனையாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 14,062 கார்கள் விற்பனையாகியுள்ளன. கிரெட்டா கார் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தான் இந்த அப்டேட்டட் வெர்ஷன் வெளியாகும் என தெரிகிறது.

suv sales in july

இந்த பட்டியலில் ஆச்சரியமான விஷயம் என்வென்றால் மாருதியின் ஃபிரான்க்ஸ் கார் இருக்கிறது. அதுவும் டாடாவின் பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்துவிட்டது. இந்த பட்டியலில் அடுத்தாக உள்ள மாருதி நிறுவனத்தின் கார் என்றால் அது கிராண்ட் விட்டாரா கார் தான். பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் 3 கார்கள் டாப் 10 பட்டியலில் உள்ளன.

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் கடந்த ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 12,349 கார்கள் விற்பனையாகியுள்ளது. டாடாவின் பஞ்ச் காரை பொருத்தவரை 12,019 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த இரு கார்களும் டாப் 10 பட்டியில் இருக்கிறது. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த கார் வெளியானால் விற்பனை அதிகாரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

suv sales in july

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய கார்கள் இணைந்து 10,522 கார்கள் விற்பனையாகியுள்ளன. கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் 9740 கார்கள் விற்பனையாகியுள்ளன.மாருதி கிராண்ட் விட்டாரா 9079 கார்கள் விற்பனையாகியுள்ளன. பொலிரோ மற்றும் பொலிரோ நியோ சேர்ந்து 8921 கார்கள் விற்பனையாகியுள்ளன.

மாருதி பிரெஸ்ஸா கார் தனது இரண்டாவது தலைமுறை அப்டேட்டை சமீபத்தில் தான் பெற்றது. கிராண்ட் விட்டாரா கார் மார்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களக்க போட்டியை கொடுக்கிறது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் தனது ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய எஸ்யூவி கார்களை காட்சிப்படுத்தி பின் விற்பனைக்கு வந்துள்ளது.

ஃபிரான்க்ஸ் கார் மார்கெட்டில் களம் இறங்கியது முதல் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக கூட இந்த ஃபிரான்க்ஸ் கார் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் மற்ற நிறுவனங்களும் போட்டி போடும் என்பதால் மார்கெட்டில் இனி நடக்கப்போவது எஸ்யூவிக்கான போர் என்றே சொல்லிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இனி வரப்போவது பண்டிகை கால சீசன் தான். ஆகஸ்ட் 15க்கு பிறகு வரிசையாக, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, என பொங்கல் வரை பண்டிகை காலம் என்பதால் அப்பொழுது விற்பனை அமோகமாக இருக்கும் அதை குறி வைத்து எஸ்யூவி செக்மெண்டில் ஹோண்டா எலவேட், சிட்ரோன் சி3ஏர்கிராஸ், டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் களம் இறங்குகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 18:28 [IST]
English summary
Suvs constitute 50 of car sales in july maruti leads the segment
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X