சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?

சுஸூகி நிறுவனம் ஜிம்னி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கப்போவதாக முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கார்பன் நியூட்டராலிட்டி கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் தனது வாகனங்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த திட்டங்களை எடுத்துள்ளது. இதனால் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் தனது இவிஎக்ஸ் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது.

சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?

வரும் 2024ம் நிதியாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 5 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய இவிஎக்ஸ் காரின் புரோடெக்ஷன் மாடலும் ஒன்று. சுஸூகி நிறுவனம் தனது கார்பன் நியூட்டிராலிட்டியை ஐரோப்பாவில் தனது ஜிம்னி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தித் துவங்க முடிவு செய்துள்ளது. ஜிம்னி கார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் 5 டோர் ஜிம்னி காரை அறிமுகப்படுத்தியது.

அதற்கு முன்னர் இந்தியாவில் 3 டோர் ஜிம்னி கார் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது இதில் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது ஐரோப்பாவில் விற்பனை செய்ய மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இந்த கார் விற்பனைக்கு வருமா என்ற தகவல் வெளியாகவில்லை.

தற்போது ஐரோப்பாவில் ஜிம்னி காரை பொருத்தவரை 100 பிஎச்பி திறன் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் காராக இருக்கிறது. இது 4X4 ஆப்ஷனை ஸ்டாண்டர்டாக வைத்துள்ளது. ஐரோப்பாவில் சுஸூகி நிறுவனம் 80:20 விகிதத்தில் 80 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்கள், 20 சதவீதம் ஹைபிரிட் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் பெட்ரோல், ஹைபிரிட், எலெக்ட்ரிக், சிஎன்ஜி, பயோ கேஸ், மற்றும் எத்தனால் ஆகிய எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கிறது.

ஜிம்னி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 டோர் எலெக்ட்ரிக் ஜிம்னி கார் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Suzuki conforms jimny electric car for Europe know India launch
Story first published: Sunday, January 29, 2023, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X