சுஸுகி உலக அளவில் எத்தனை யூனிட் கார்களை விற்பனை செஞ்சிருக்கு தெரியுமா? கற்பனையிலகூட இத நினைச்சு பார்க்கல!

சுஸுகி நிறுவனம் இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக அளவிலும் நல்ல வரவேற்பைப் பெறும் நிறுவனமாக விளங்கிக் கொண்டு இருக்கின்றது. இதன் விளைவாக விற்பனையில் மிக முக்கியமான மைல் கல்லை அது எட்டி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சுஸுகி மோட்டார் கார்பரேஷன் நிறுவனம் உலக அளவில் 80 மில்லியன் யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் மட்டுமே இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் இந்த தகவல் கூடுதல் ஷாக்கை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Suzuki global sales reaches 80 million

2023 ஆகஸ்டு மாத இறுதி நாளின்படி விற்பனையாகிய யூனிட்டின் விபரம் இதுவாகும். இன்றைய நாளின் நிலவரப்படி கணக்கிட்டு பார்த்தால் இந்த எண்ணிக்கையில் இன்னும் சில லட்சக் கணக்கான யூனிட்டுகளை சேர்க்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் தாயகமான ஜப்பானில் மட்டும் இதுவரை 28.9 மில்லியன் யூனிட்டு சுஸுகி வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக இந்தியாவே இருக்கின்றது. ஆமாங்க, ஜப்பானுக்கு அடுத்தபடியாக சுஸுகியின் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றது என்றால் அது இந்தியாதான். இந்த ஒட்டுமொத்த விற்பனையில், அதாவது, 80 மில்லியன் யூனிட் விற்பனையில் 32.6 சதவீதம் இந்தியாவிலேயே விற்பனையாகி இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாகவே பிற ஆசிய நாடுகள் இருக்கின்றன. 13.5 சதவீதம் யூனிட்டுகள் அங்கு விற்பனையாகியவை ஆகும்.

Suzuki global sales report

இதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் 10 சதவீதமும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஓசோனியா உள்ளிட்ட நாடுகளில் 7.8 சதவீதம் வரை சுஸுகி நிறுவன தயாரிப்புகள் விற்பனையாகி இருக்கின்றன. சுஸுகி நிறுவனம் முதன் முதலில் மினி வாகனங்களை இந்த உலகிற்காக விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அது முதன் முதலில் உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த கார் மாடல் சுஸுலைட் (Suzulight) ஆகும். இதனை 1955 அக்டோபர் மாதத்திலேயே சுஸுகி ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்தின் வாயிலாகவே சுஸுகி தன்னுடைய வாகன உற்பத்தி பயணத்தைத் தொடங்கியது.

1979 alto

இதற்கு அடுத்தபடியாக ஃப்ரண்டே 800 எனும் கார் மாடலை 1965-இல் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதுவும் ஓர் காம்பேக்ட் வகை காராகும். ஆகையால், கார் காதலர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்தது. சுஸுலைட் 1955இல் ஜப்பானில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டாலும், உலக நாடுகளில் அதன் வருகை 1959 ஆம் ஆண்டிலேயே அரங்கேறியது.

ஆமாங்க இந்த ஆண்டிலேயே சுஸுலைட் காரின் ஏற்றுமதியை அது தொடங்கியது. இதைத்தொடர்ந்து, 1975 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாகிஸ்தானில் அதன் உற்பத்தி பணியைத் தொடங்கியது. இதுவே ஜப்பானைத் தாண்டி சுஸுகி தனது உற்பத்தி ஆலையை கார் தயாரிப்பு பணிகளை மேற்கொண்ட முதல் நாடாகும்.

1955 suzulight

இதற்கு பின்னரே அது இந்தியாவில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்தது. 1983லேயே அதன் உற்பத்தி பணிகளை இந்தியாவில் நிறுவனம் விரிவாக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து, 1992 இல் ஹங்கேரி நாட்டில் என தன்னுடைய உற்பத்தி பணிகளை மேலும் விரிவாக்கம் செய்தது. ஆனால், இந்தியாவே அதற்கு மிகப் பெரிய வெளிநாட்டு சந்தையாக மாறியது.

இந்தியாவின் மாருதி நிறுவனத்துடன் இணைந்தே தன்னுடைய அனைத்து செயல்பாடுகளையும் அந்நிறுவனம் நாட்டில் மேற்கொண்டு வருகின்றது. இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற மேலும் பல நாடுகளுக்கு அது வாகனங்களை உற்பத்தி செய்து சுஸுகி ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் சுஸுகி நிறுவனம் ஜப்பான் உட்பட 10 நாடுகளில் 15 வாகன உற்பத்தி ஆலைகளை அமைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

1965 fronte 800

இதுதவிர, 184க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆல்டோ இந்தியாவில் விற்பனையாகும் மிக சிறப்பான மாருதி சுஸுகி தயாரிப்பாகும். இந்த காரை 1979 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் 80 மில்லியன் விற்பனையில் 20 சதவீதம் பங்களிப்பு ஆல்டோவுடையதாகும்.

இதுவே இந்தியர்கள் பலரின் முதல் காரும் கூட. சுமார் 44 ஆண்டுகளாக இந்தியாவில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்து. அடக்கமான தோற்றம், மலிவு விலை, மிக சிறந்த மைலேஜ் திறனே இந்த காரை இந்தியர்களின் ஃபேவரிட் காராக மாற்றி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் பலரின் ஃபேவரிட் நிறுவனம் என்று மட்டுமே சஸுகியை ஒரு சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையோருக்கு புதிய பாடம் கற்பிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்திருக்கின்றது. அதாவது, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிரியமான கார் பிராண்டாக சுஸுகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 4, 2023, 8:30 [IST]
English summary
Suzuki global sales reaches 80 million units here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X