மேட்-இன்-இந்தியா வாகனங்களுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்!! கடல் கடந்து போகும் நம்ம ஊர் மாருதி கார்!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சுஸுகி ஜிம்னி வாகனம் ஆஸ்திரேலியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி வாகனத்துடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலிய ஜிம்னி எந்த அளவிற்கு வேறுப்பட்டது என்பதையும், இந்த ஆஃப்-ரோடு வாகனத்தின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் பற்றி இனி பார்க்கலாம்.

மாருதி நிறுவனத்தில் இருந்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற கார்களுள் ஒன்றாக ஜிப்ஸியை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகி நிறுவனத்தை தெரியாதவர்கள் கூட ஒரு சமயத்தில் ஜிப்ஸி வாகனத்தை பற்றி அறிந்திருந்தனர். இதற்கு போட்டியாகவே மஹிந்திரா நிறுவனம் தார் வாகனத்தை அறிமுகப்படுத்தியது.

suzuki launched jimny in australia

அதன்பின், ஜிப்ஸியின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. ஜிப்ஸியின் இடத்தை நிரப்பும் வகையில், ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னியை இந்த 2023ஆம் வருடத்தின் துவக்கத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட ஜிம்னி வாகனத்திற்கான புக்கிங்குகள் அப்போதே துவங்கப்பட்டன.

ஜப்பான் நாட்டிற்கான ஜிம்னி வாகனங்கள் ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுவதை போலவே, இந்திய மார்க்கெட்டிற்கான ஜிம்னி வாகனங்களும் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜிம்னி வாகனங்களை ஆஸ்திரேலியா நாட்டில் சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

suzuki launched jimny in australia

ஆஸ்திரேலியாவில் 5-கதவு மற்றும் 3-கதவு ஆப்ஷன்களில் சுஸுகி ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 3-கதவு ஜிம்னி வாகனம் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் 3-கதவு ஜிம்னி வாகனங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட உள்ளன. இந்தியாவில் ஜிம்னியில் வழங்கப்படுவதை போல, ஆஸ்திரேலியாவில் ஜிம்னி வாகனத்தின் டேஸ்போர்டில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஜிம்னி லைட், ஜிம்னி மற்றும் ஜிம்னி எக்ஸ்.எல் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் சுஸுகி ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், ஜிம்னி லைட் மற்றும் ஜிம்னி வேரியண்ட்கள் 3-கதவுகளை மட்டுமே கொண்டவை ஆகும். இவை ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

suzuki launched jimny in australia

அதுவே, ஜிம்னி எக்ஸ்.எல் 5-டோர் வெர்சன் ஆகும். இதுதான் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. மேற்கூறப்பட்ட 3 வேரியண்ட்களில், ஜிம்னி லைட்டின் விலை 30,490 ஆஸ்திரேலியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.16.7 லட்சம் ஆகும். ஜிம்னி லைட் வேரியண்ட் ஆஸ்திரேலியாவில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஜிம்னி மற்றும் ஜிம்னி எக்ஸ்.எல் வேரியண்ட்களை அங்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் பெறலாம். ஜிம்னி வேரியண்ட்டின் விலை மேனுவல் ஆப்ஷனில் 31,990 ஆஸ்திரேலியன் டாலர்களாகவும் (ரூ.17.5 லட்சம்), ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் 33,490 ஆஸ்திரேலியன் டாலர்களாகவும் (ரூ.18.3 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி வாகனம் ஆஸ்திரேலியாவில் சுமார் ரூ.19.15 லட்சம் & ரூ.20 லட்சம் விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் ஜிம்னி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.15.05 லட்சம் வரையில் உள்ளன. இதில் இருந்து இந்தியாவில் எவ்வளவு குறைவான விலையில் ஜிம்னியை மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது என்பதை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 11, 2023, 22:31 [IST]
English summary
Suzuki launched made in india jimny in australia check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X