தினமும் 8,000 மாருதி கார்கள் விற்பனை!! சுஸுகி இந்த முறை அடிக்கிற அடி... எதிரியால எந்திரிக்கவே முடியாது!

2030ஆம் ஆண்டுகளில் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 8,000 கார்கள் அசால்ட்டாக விற்பனையாகும் என ஓர் அதிர்ச்சிக்கர புள்ளி விபரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்பரேஷனுக்கு மிக முக்கியமான & பெரிய ஆட்டோமொபைல் சந்தை இந்தியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஆண்டுகளில் எவ்வாறு எல்லாம் செயல்பட வேண்டும்/ செயல்பட உள்ளோம் என்பது தொடர்பாக சுஸுகி மோட்டார் நிறுவனம் தனக்கென ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொண்டுள்ளது.

suzuki motor plans for india

அதாவது, 2030ஆம் ஆண்டிற்கு உள்ளாக, ஒரு வருடத்தில் 30 இலட்ச கார்களை விற்பனை செய்யும் அளவிற்கு இந்தியாவில் வளர்ச்சி காண வேண்டும் என சுஸுகி இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது. இதற்கு முதலில், இந்தியாவில் கார்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் சுஸுகி தெளிவாக உள்ளது.

இப்போது இருப்பதை விட இந்தியாவில் கார்கள் உற்பத்தியை டபுள் மடங்காக அதிகரிக்கும் முனைப்பில் இருக்கும் சுஸுகி மோட்டார் நிறுவனம் அடுத்த 10 வருடங்களில் 40 இலட்ச கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதத்திறகு உள்ளாக இந்தியாவில் 40 இலட்ச கார்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் என புள்ளி விபரங்கள் கணித்துள்ளன.

suzuki motor plans for india

ஆனால், இந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டு சமயத்தில் 60 இலட்சங்களாக அதிகரிக்கும் என ஜப்பானில் இருக்கும் சுஸுகி மோட்டாரின் தலைமையகம் கணித்துள்ளது. ஒரு வருடத்தில் விற்பனை செய்யப்படும் இந்த 60 இலட்ச கார்களில் பாதி, அதாவது 30 இலட்ச கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாக இருக்க வேண்டும் என்பது சுஸுகி மோட்டார் கார்பரேஷனின் விருப்பம்.

இப்போதும் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுஸுகி தான். ஆனால், தற்சமயம் மாருதி சுஸுகியின் மார்க்கெட் ஷேர் 42% மட்டுமே. இதனை 2030ஆம் ஆண்டிற்கு உள்ளாக 50% ஆக அதிகரிக்க வேண்டும் என சுஸுகி டார்க்கெட் செட் செய்துக் கொண்டுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 15% பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் சுஸுகி திட்டமிட்டுள்ளது.

suzuki motor plans for india

மாருதி சுஸுகியை விட சின்ன, சின்ன கார் நிறுவனங்கள் கூட 2030க்குள் மொத்த விற்பனையில் 25% - 30%-ஐ எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளன. ஆனால், மாருதி சுஸுகி வெறும் 15% ஆக இவி டார்க்கெட்டை நிர்ணயித்துக் கொண்டிருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு முக்கிய காரணம், மாருதி சுஸுகியின் நோக்கம் பெரிதும் ஹைப்ரீட் வாகனங்களை நோக்கியே உள்ளது. இதனால் தான், 2030ஆம் ஆண்டிற்கு உள்ளாக மொத்த விற்பனையில் குறைந்தது 25% ஆவது ஹைப்ரிட் வாகனங்களாக கொண்டுவர வேண்டும் என முடிவெடுத்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் உலகளவில் சுஸுகி மோட்டார் கார்பரேஷன் பெற்ற வருவாயில் 39% இந்தியாவில் இருந்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் சந்தையில் மேலும் வளர்ச்சி காண்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அது அத்தனையையும் மாருதி சுஸுகி செய்து வருகிறது. ஆதலால், 2030க்குள் இந்த இலக்குகளை அந்த நிறுவனம் எளிதாக எட்டிவிடும். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் மாருதி சுஸுகியின் இலக்கு சற்று குறைவாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். ஆனால் எப்படியிருந்தாலும், மத்திய அரசின் இவி நோக்கிய முயற்சிகளில் மாருதி சுஸுகியின் பங்கும் இருக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 22:53 [IST]
English summary
Suzuki motor plans to doubled its manufacturing capacity in india all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X