அனைத்து விற்பனையகத்தையும் இழுத்து மூடும் சுஸுகி! எதிரி நாடா இருந்தாலும், அவங்களோட நிலைமை பார்த்த பாவமா இருக்கு

பாகிஸ்தானின் இப்போதைய நிலை மிக மோசமானதாக இருக்கின்றது. அது கடும் பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. பண வீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் கடுமையான வீழ்ச்சி உள்ளிட்டவையே பாகிஸ்தானின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் ஆகும்.

மேலும், சரியான நிர்வாக திறன் இல்லாத தலைமைகள் அலட்சியத்துடன் கையாண்டதும் பாகிஸ்தானின் இப்போதைய இக்கட்டான சூழலுக்கு காரணம் என கூறப்படுகின்றது. இதனால், அந்நாட்டில் பால் விற்பனை முதல் வாகன விற்பனை வரை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, அனைத்தின் விலைகளும் மிகக் கடுமையாக உயர்ந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Suzuki alto

இந்த மாதிரியான சூழலில் பாகிஸ்தானில் உள்ள தனது அனைத்து விற்பனையகங்களையும் சுஸுகி நிறுவனம் இழுத்து மூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுஸுகி நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் எந்தவொரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டில் அதுவே அமோக விற்பனையைப் பெறும் நிறுவனமாக இருக்கும். உதாரணமாக இந்தியாவை வைத்துக் கொள்ளலாம்.

இங்கு மாருதி-சுஸுகி நிறுவனங்களின் தயாரிப்புகளே டாப் செல்லிங் வாகனங்கள் ஆகும். இத்தகைய நிறுவனத்தின் தயாரிப்புகளே பாகிஸ்தானில் விற்பனையில் முக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அனைத்து விற்பனையகங்களும் மூடப்படுவதற்கு இது காரணமல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அந்நாட்டின் ஸ்டேட் பேங்க் (State Bank of Pakistan) அமல்படுத்திய புதிய விதியே காரணம் என கூறப்படுகின்றது.

Suzuki wagonr

இது, சிகேடி கிட்களை நாட்டில் இறக்குமதி செய்ய முன் கூட்டியே அனுமதியை பெற வேண்டும் என்கிற புதிய சட்டத்தை அமல்படுத்தியது. இந்த கெடுபிடியே மாருதியின் அனைத்து விற்பனையகங்களும் தற்போது இழுத்து மூடப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. தேவையான வாகன பாகஙக்ளை தேவைக்கேற்ப இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், அதை கையிருப்பில் வைத்துக் கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் விளைவாக பாக்கிஸ்தான் சுஸுகி இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தி ஆலைகளை ஜூன் 22 தொடங்கி ஜூலை 8 வரை மூட திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலும் இதேபோல் அதிக நாட்கள் ஆலையை அது மூடியிருந்தது.

சுமார் 75 நாட்கள் ஆலை மூடப்பட்டது. 2022 ஆகஸ்டு முதல் மூடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க விற்பனையில் கடும் சரிவை நிறுவனம் சந்தித்து இருக்கின்றது. 2023 மே மாதத்தில் இந்தியாவில் புதிய மாருதி சுஸுகி கார்கள் லட்சக் கணக்கில் விற்பனையாகிய நிலையில் பாகிஸ்தானிலோ வெறும் 2,958 யூனிட்டுகல் மட்டுமே விற்பனையாகின.

அந்நாட்டில் ஆல்டோ, வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் போன்ற கார் மாடல்களையே நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,34,270 யூனிட்டுகள் விற்பனையாகின. ஆனால், 2023 நிதியாண்டில் விற்பனை 54 சதவீதம் வரை குறைந்திருக்கின்றது. இந்த நிலையே இன்னும் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

புதிய ஆஃபர் வாயிலாக மட்டுமே விரைவில் பாகிஸ்தான் ஆட்டோ துறை நல்ல வளர்ச்சியைக் காண ஆரம்பிக்கும் என்றும் அவர்கள் யூகித்து இருக்கின்றனர். பாகிஸ்தான் சுஸுகியை போலவே இன்னும் சில நிறுவனங்களும் இந்த மாதிரியான உற்பத்தி மற்றும் விற்பனைச் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விற்பனையும் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சுஸுகி மிக மோசமான விற்பனை மற்றும் உற்பத்தியில் சிக்கலை அது சந்தித்து வருகின்றது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 21, 2023, 9:29 [IST]
English summary
Suzuki pakistan shuts all shop here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+