ஜிம்னி ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் கார் அறிமுகம்! ஆனா இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

மாருதி நிறுவனம் ஆஸ்திரேலிய மார்கெட்டிற்காக ஜிம்னி காரின் ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது 5 டோர் ஜிம்னி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதலே இந்த காருக்கான புக்கிங் குவிந்துள்ளது. தற்போது வரை சுமார் 22 ஆயிரம் பேர் இந்த காரை வாங்க புக்கிங் செய்துள்ளனர். இந்த காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிம்னி ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் கார் அறிமுகம்! ஆனா இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

மாருதி நிறுவனத்தின் இந்த ஜிம்னி கார் ஒன்றும் புதிதல்ல 1970களிலேயே இந்த ஜிம்னி காரை மாருதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் இந்த காரை தயாரித்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதுவரை 3 டோர் வெர்ஷன் காரைதான் விற்பனை செய்து வந்தது. முதன் முறையாக 5 டோர் வெர்ஷனை காரை இந்திய மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த காரின் பெருமையை கொண்டாடும் வகையில் சுஸூகி நிறுவனம் ஜிம்னி காரின் ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் காரை ஆஸ்திரேலிய மார்கெட்டிற்காக காட்சிப்படுத்தியுள்ளது இந்த காரை அந்நிறுவனம் 2 டோர் வெர்ஷன் எஸ்யூவி காராக இந்த காரை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த காரில் முக்கிய அம்சமாக ரெட் மட் ஃபிளாப்கள் முன் மற்றும் பின் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ரெட்ரோ தீம் டீக்கல் வழங்கப்பட்டுள்ளது. இது போக பிளாக் பியர்ல், ஜங்கில் கிரீன், ஒயிட் மற்றும் மிடியம் க்ரே ஆகிய நிறங்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

ஜிம்னி ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் கார் அறிமுகம்! ஆனா இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

இந்த ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் 4X4 ஆப்ஷனுடன் மட்டும் தான் இருக்கிறது. இது போக ரெட் மட் ஃபிளாப்களில் சுஸூகி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். ஜிம்னி கார் சுஸூகி நிறுவன கார்களிலேயே பிரத்தியேகமானது. இதன் சொகுசு மற்றும் ஆஃப்ரோடு அம்சங்கள் இந்திய போன்ற மார்கெட்டிற்கு ஏற்றாராக இருக்கும்.

ஆனால் மிக தாமதமாக தான் இந்த காரை இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செய்தியில் உள்ள ஸ்பெஷல் ஹெரிடேஜ் எடிசன் கார் ஆஸ்திரேலியா மார்கெட்டிற்கு மட்டும் தான் இந்த கார் இந்தியாவில் தயாராகி ஆஸ்திரேலியாகவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.

அதுவும் இந்த கார் ஸ்பெஷல் எடிசன் கார் என்பதால் வெறும் 300 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த 300 கார்களை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் 5 டோர் கார் தான் விற்பனையாகவுள்ளது.இதற்காக புக்கிங் குவிந்துள்ளது. இந்தகார் மார்கெட்டில் உள்ள மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக களம் இறக்கவுள்ளது. இந்த கார் ரூ10-18 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஜம்னி காரை சாலையில் பார்க்க நீங்களும் ஆர்வமாக இருக்கீங்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Friday, March 3, 2023, 21:00 [IST]
English summary
Suzuki showcased jimny special heritage edition
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+