மேட்-இன் இந்தியா வேகன்ஆர் கார் பயோ மீத்தேனில் ஓடப்போகுதா!! சீக்கிரமே டோக்யோவில் காட்சிப்படுத்த போறாங்க!

இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் மாடல் இருக்கின்றது. இந்த காருக்கு டால் பாய் (Tall Boy) என்கிற செல்ல பெயரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கார் மாடலையே பயோ மீத்தேனில் ஓடும் காராக மாருதி சுஸுகி தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போதைய நிலவரப்படி இந்த கார் சிஎன்ஜி (CNG) மற்றும் பெட்ரோல் (Petrol) ஆகிய மோட்டார் தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், வெகு நாட்களில் இந்த மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கப் போவதில்லை என்பைத உறுதிப்படுத்தும் விதமாக மாருதி நிறுவனத்தின் இந்த செயல்பாடு அமைந்திருக்கின்றது.

Biomethane powered wagon r

பயோ மீத்தேன் வாயு பவர்டு வேகனஆர் காரை அது வெகு விரைவில் வெளியீடு செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டு இருக்கின்றது. ஜப்பானின் தலைநகரான டோக்யோவில் 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோ (2023 Japan Mobility Show) நடைபெற இருக்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் வைத்தே சுஸுகி அந்த காரை வெளியீடு செய்ய இருக்கின்றது.

வரும் அக்டோபர் மாதத்திலேயே இந்த வாகன கண்காட்சி நடைபெற இருக்கின்றது. 26 அக்டோபர் தொடங்கி 5 நவம்பர் வரையில் இந்த வாகன கண்காட்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சுஸுகி நிறுவனம் இந்த பயோ மீத்தேனில் ஓடும் காரை காட்சிப்படுத்துவது இது முதல் முறையல்ல.

Maruti wagonr rear

இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 (G7) மாநாட்டிலேயே பயோ மீத்தேன் வாயுவில் இயங்கும் வேகன்ஆர் கார் காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே, அக்கார் காட்சிக்குள்ளாவது முதல் முறை ஆகும். இதனை சிபிஜி (CBG) ரக வாகனம் என சுஸுகி குறிப்பிடுகின்றது.

அதாவது, அழுத்தப்பட்ட பயோ மீத்தேன் வாயு (Compressed biomethane gas)-வில் இயங்கும் வாகனம் என்பதே இதற்கு பொருள் ஆகும். சிபிஜி பவர்டு வேகன்ஆர் காரை உருவாக்கும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே அக்காரின் கான்செப்ட் மாடலை டோக்யோவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது. வேகன்ஆர் காரை மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனமாக தயாரிக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில்கூட இதே கார் மாடலில் இ20 மற்றும் இ85 ரகம் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இதேபோல், மின்சார வெர்ஷனிலும் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இப்போது வரை பெட்ரோலில் ஓடும் வேகன்ஆர் மட்டுமே வர்த்தகத்தில் உள்ளது. மற்ற வெர்ஷன்கள் எல்லாம் எப்போது விற்பனைக்கு வரும் என்பது துள்ளியமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் அவை விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி, ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மற்றும் ஹைபிரிட் போன்ற வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது. ஆகையால், நிறுவனம் சிஎன்ஜி, சிபிஜி மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேகன்ஆர் கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் ஆகும். இதில் நிறுவனம் பயோ மீத்தேன் வாயுவில் இயங்கும் வெர்ஷனை உருவாக்கி இருப்பது வேகன்ஆர் பிரியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தும் செயலாக அமைந்திருக்கின்றது. ஆனால், இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் வெளியாகவது மட்டும் லேசான சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 6, 2023, 11:10 [IST]
English summary
Suzuki to unveil biomethane powered wagon r at 2023 japan mobility show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+