சுஸுகி எலெக்ட்ரிக் காரை தயாரிக்கலைனு யாரு சொன்னா! ஃபுல் சார்ஜில் 230கிமீ டிராவல் செய்யும் குட்டி மின்சார கார்!
சுஸுகி நிறுவனம் குட்டி எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை ஜப்பான் மோட்டார் ஷோ வாயிலாக வெளியீடு செய்திருக்கின்றது. இடபிள்யூஎக்ஸ் எனும் இ-காரையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் மிகப் பெரிய ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இருக்கின்றது. இதற்கு மிகப் பெரிய போட்டி என்றால் அது மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யே ஆகும். ஆனால், இந்த நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் டாடாவைக் காட்டிலும் பலமடங்கு பின் தங்கி இருக்கின்றது.

டாடா இந்தியாவில் டியாகோ இவி, டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி என பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர இன்னும் பல எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியிலும் அது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், மாருதி சுஸுகியோ ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு வழங்காத நிலையிலேயே இந்தியாவில் தென்படுகின்றது. ஆகையால், பலர் இந்த பிராண்ட் இன்னும் மின்சார கார் உற்பத்தியை தொடங்கவில்லை என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதுதான் இல்லை இந்த நிறுவனம் ஏற்கனவே மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கிவிட்டது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஓர் கான்செப்ட் மாடலை அது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோ-வில் வெளியீடு செய்திருக்கின்றது. இ.டபிள்யூ.எக்ஸ்., எனும் மாடலையே அது வெளியீடு செய்து உள்ளது. இந்த கான்செட்ப் எலெக்ட்ரிக் கார் மாடல் ஓர் ஃபுல் சார்ஜில் 230 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. இதன் மின்சார வெர்ஷனாகவே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் கான்செப்ட் உள்ளது. அதாவது, 'டால் பாய்' தோற்றமே இந்த காருக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது மலிவு விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக எளிமையான மற்றும் குட்டியான தோற்றம் இடபிள்யூஎக்ஸ்-க்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மின்சார காரின் நீளம் 3,395 மிமீ ஆகும். இதேபோல், இதன் அகலம் 1,475 மிமீட்டராகவும், உயரம் 1,620 மிமீட்டராகவும் இருக்கின்றது. இந்த அளவுகளை வைத்து பார்க்கையில் இடபிள்யூஎக்ஸ் எஸ்-பிரஸ்ஸோவைவிட ஷார்ட்டாக இருக்கும் என்பது தெரிய வருகின்றது.
எனவே, ஒட்டுமொத்த சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மிக மிக குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என்கிற எண்ணம் இன்னும் அழுத்தமாக நம்மிடையே ஏற்பட்டு இருக்கின்றது. மேலும், இப்போது வெளியாகி செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் பலமடங்கு அழகானதாகவும் இருக்கும் என்பதையும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த காரின் வெளிப்புற தோற்ற அழகிற்காக பன்முக அலங்கார பொருட்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. சி வடிவ எல்இடி பகல்நேர லைட், மின்னும் சுஸுகி லோகோ, கவர்ச்சியான தோற்றம் கொண்ட அலாய் வீல், வித்தியாசமான தோற்றம் கொண்ட முன் பக்க பம்பர் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதவேளையில், மாற்று திறன் கொண்ட வாகனங்களான சிஎன்ஜி, ஹைபிரிட் ஆகிய வசதிக் கொண்ட வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் விஷயத்தில் மாருதி சுஸுகி இந்தியாவில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications









