கோடி கணக்கான மக்கள் ஆவலோடு காத்து கெடந்த ஸ்விஃப்ட் கார் வெளியீடு! இதுதான் அந்த அதிகம் மைலேஜ் தரும் ஸ்விஃப்டா!!
கோடிக் கணக்கானோர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) இருக்கின்றது. இந்த காரை சுஸுகி இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நம் நாட்டில் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே உலக நாடுகளிலும் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் மாடலின் நான்காம் தலைமுறையை அந்நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இதன் வருகையை எதிர்நோக்கி கோடிக் கணக்கான ஸ்விஃப்ட் (4th gen Swift) கார் பிரியர்கள் காத்துக் கொண்டிருந்த சூழலிலேயே சுஸுகி தற்போது அக்காரை வெளியீடு செய்திருக்கின்றது.
'டோக்யோ மோட்டார் ஷோ' (Tokyo Motor show) வாயிலாகவே நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை சுஸுகி வெளியீடு செய்து இருக்கின்றது. இந்த காரையே அடுத்த ஆண்டில் மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது கான்செப்ட் மாடல் மட்டுமே ஆகும்.
ஆனால், அது தற்போது உற்பத்திக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகின்றது. காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் காரின் வெளிப்புற தோற்றத்த் வைத்து பார்க்கையில், இந்த கார் உற்பத்திக்கு தயாராகிவிட்டது துள்ளியமாக தெரிகின்றது. ஏற்கனவே இந்த காரின் படங்கள் மட்டுமே வெளியீடு செய்யப்பட்டுநிலையில், இப்போதே முதல் முறையாக பொதுவெளியில் அக்கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த காரின் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை. அதேவேளையில், அதன் ஸ்டைலை பலமடங்கு மேம்படுத்தி இருக்கின்றது. இதற்காக புதிய காஸ்மெட்டிக்குகள் பலவற்றை நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரில் அது சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், இதன் மூக்கு பகுதி முன்பைவிட தற்போது கூடுதல் ஃப்ளாட்டாக உள்ளது.
அதேவேளையில், கூடுதல் ஷார்ப்பான தோற்றத்தை ஹெட்லேம்ப் வாயிலாக மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. இத்துடன், எல்இடி பகல் நேர லைட், புஜெக்டர் செட்-அப்புடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இதன் க்ரில்லிற்கும் மறு வடிவமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. சற்று பெரியதாகவும், வளைவான முனைகளையும் அது கொண்டிருக்கின்றது.
இத்துடன், கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தைக் காருக்கு சேர்க்கும் விதமாக ஆங்காங்கே கிளாஸ் மற்றும் டார்க் குரோம் ஃப்னிஷ் கொண்ட அணிகலன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டும் இல்லைங்க புதிய அம்சங்களையும் இந்த காரில் மாருதி வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், புதிதாக தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரில் அடாஸ் (Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பத்தை சுஸுகி சேர்த்திருக்கின்றது.
இது உலக சந்தைக்கான ஸ்விஃப்ட் ஆகும். இதனால்தான் இந்த அம்சத்தை இந்த காரில் சுஸுகி சேர்த்து இருக்கின்றது. அதேவேளையில், இந்த அம்சத்தை இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரில் சுஸுகி வழங்குமா என்பது சந்தேகம் என்கின்றன தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இல்லாத ஸ்விஃப்டே இந்தியாவில் களமிறங்கும் என்றும் கூறப்படுகின்றது.
அடாஸ் அம்சமானது தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட் சிஸ்டம் என விபத்தைத் தவிர்க்கக் கூடிய அனைத்து வசதிகளையும் இது வழங்கும். இதுதவிர, அதிக மைலேஜ் வழங்கும் விதமாக ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதியும் ஸ்விஃப்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமே புதிய ஸ்விஃப்ட்-ஐ ஒரு லிட்டருக்கு சுமார் 26 கிமீட்டரில் இருந்து 28 கிமீட்டர் வரையில் மைலேஜ் தரும் காராக மாற்றி இருக்கின்றது.
ஆனால் இந்த மைலேஜ் திறனை மாருதி சுஸுகி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் அறிமுகத்தின்போது இந்த கார் பற்றிய பல்வேறு ரகசியங்களை அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய தலைமுறை மிகுந்த அட்டகாசமான ஸ்விப்டை சுஸுகி தயார் செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் வாயிலாக இப்போது விற்பனையில் உள்ள பல கார்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியவையாக மாறி இருக்கின்றன. ஆனால், இந்த அம்சம் கொண்ட கார்கள் மிக விலை உயர்ந்தவையாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








