ரேஸ் டிராக்கில் ஜாலியா கார்ட் ஓட்ட ஆசையா!! பெங்களூரில் நடக்குது... கலந்துக் கொள்ள இங்கே அப்ளை பண்ணுங்க!!
ரெட் ராபிட் ரேசர்ஸ் (Red Rabbit Racers - R3) இந்தியாவின் மிகப் பெரிய கார்ட் ரேசிங் & கார் ராலி குழு. பெங்களூருவில் ரெட் ராபிட் ரேசர்ஸ் குழு விரைவில் நடத்த போகின்ற கார்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நமது டிரைவ்ஸ்பார்க் குழு அதிகாரப்பூர்வ மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது. பெங்களூருவில் எந்த பகுதியில் இந்த கார்ட் ரேசிங் நடத்தப்பட உள்ளது? இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் எவ்வாறு கலந்துக் கொள்வது என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல்களை இலவச போட்டு கொடுத்தால் பைக், கார்களை ஓட்ட யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். அதுவும் ஆள் நடமாட்டமே இல்லாத ரேஸ் டிராக்கில் எவ்வளவு வேகத்தில் வேண்டுமானாலும் ஓட்டிக் கொள்ளலாம் என சொன்னால், அந்த சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. நம்மில் சிலர், சிறிய வயதில் பெரிய பைக் ரேஸர் அல்லது கார் ரேஸராக ஆக வேண்டும் என்றுக் கூட நினைத்திருப்போம். ஆனால் வாழ்க்கை நம்மை வேறு பாதையில் தள்ளி இருக்கும்.

அத்தகையவர்களுக்காகவே ரெட் ராபிட் ரேஸர்ஸ் குழு 'டேலண்ட் ஸ்காட் சாம்பியன்ஷிப்' (Talent Scout Championship) என்ற போட்டியை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. இதில் பெங்களூர் நகரத்திற்கான பாகம் நாளை (ஆகஸ்ட் 26) சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. பெங்களூரில் அருணி கிரிட் என்ற பகுதியில் நடைபெறவுள்ள ரெட் ராபிட் ரேஸர்ஸ் குழுவின் இந்த பெங்களூர் ஸ்காட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ மீடியா பார்ட்னராக நமது டிரைவ்ஸ்பார்க் இணைந்துள்ளது.
இதனால், நாளை நடைபெறவுள்ள இந்த ஸ்காட்டிங் போட்டிகள் குறித்த விபரங்களையும், போட்டி முடிவுகளையும் நமது டிரைவ்ஸ்பார்க்கின் இணையத்தள பக்கத்திலும், யூடியூப் சேனலிலும் காணலாம். இந்த போட்டி நிகழ்ச்சிகளை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் நேரடியாக அந்த பகுதிக்கே சென்று காட்சிப்படுத்த உள்ளனர். போட்டியில் பங்கேற்று வெற்றிபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவை ரெட் ராபிட் ரேஸர்ஸ் சார்பில் வழங்கப்பட உள்ளன.
அத்துடன், திறமையான ரேஸர்களுக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள எஃப்1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நேரில் கண்டுக்களிப்பதற்கான வாய்ப்பையும் ரெட் ராபிட் ரேஸர்ஸ் ஏற்படுத்தி கொடுக்கும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. ரெட் ராபிட் ரேஸர்ஸ் குழு இந்தியாவில் இளம் ரேஸர்கள் பலரை சர்வதேச ஆட்டோஸ்போர்ட் பந்தயங்களுக்கு தயார்படுத்தி அனுப்பி உள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் பல இளைஞர்கள் வெவ்வேறான பொருளாதார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறது ரெட் ராபிட் ரேஸர்ஸ் குழு. இந்த குழுவில் இருந்து பங்கேற்றவர்கள் பலர் இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 2020இல் துபாயில் நடைபெற்ற கார்ட்ட்ரோம் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஓவர் ஆல் நேஷன் கோப்பைக்கான போட்டியில் ரெட் ராபிட் ரேஸர்ஸ் குழுவின் சார்பில் பங்கேற்ற ரேஸர் வெற்றிக் கோப்பையை வென்று சாதனை படைத்து இருந்தார். அதேபோல், இதே துபாய் கார்ட்ட்ரோம் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் ஓவர் ஆல் கார்ப்பிரேட் கோப்பைக்கான போட்டியில் 3வது இடத்தை இந்த குழுவை சேர்ந்த ரேஸர் தனதாக்கினார்.
ரேசிங் குழு என்பது மட்டுமின்றி, ரெட் ராபிட் ரேஸர்ஸ் குழு கார்ட் ஃபிட்டிங், கார்ட் செட்அப், கார்ட் டைனாமிக்ஸ், பிரேக்கிங், மெக்கானிக்கல் செயல்முறைகள் மற்றும் டேடா அனலைஸிஸ் போன்ற சேவைகளையும் வழங்குகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி பெங்களூர் அருணி கிரிட் பகுதியில் நடைபெறவுள்ள டேலண்ட் ஸ்காட்டிங் போட்டியில் கலந்துக் கொள்ள இன்ஸ்டாகிராமில் @redrabbitracers பக்கத்தை தொடர்புக் கொள்ளலாம்.
அல்லது 9433674185 என்ற மொபைல் எண்ணை தொடர் கொண்டும் இந்த ஸ்காட்டிங் போட்டி குறித்த விபரங்களை கேட்டறிந்து உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அல்லது, பெங்களூர் சார்ஜாபுரில் உள்ள அருணி கிரிட் பகுதிக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு உள்ளாக நேரில் வந்தும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஸ் டிராக்கில் பைக், கார்களை ஓட்டுவது மட்டுமின்றி, கார்ட்-ஐ ஓட்டுவதும் ஜாலியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், கார்ட்-ஐ அதிவேகமாக ஓட்டுவது புது விதமான அனுபவத்தை வழங்கும். ஆதலால், விருப்பப்படுவோர் மேற்கூறப்பட்ட வழிகளில் ரெட் கார்ட் ரேஸர்ஸ் குழுவை தொடர்பு கொள்ளலாம். அல்லது, நமது டிரைவ்ஸ்பார்க் குழுவையும் தொடர்புக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








