டெஸ்லா தமிழகத்திற்கு தான் வரவேண்டும் என ஓயாமல் உழைக்கும் அமைச்சர்! இதுக்காக என்னெல்லாம் பண்ணாங்க தெரியுமா?
இந்தியாவிற்கு வர உள்ள டெஸ்லா ஆலையை தமிழகத்தில் அமைய வைக்க தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் டெஸ்லா ஆலை அமைவதற்கான சாத்தியங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகில் ஆட்டோமொபைத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்த நிறுவனம் டெஸ்லா. எலெக்ட்ரிக் கார்களை எல்லாம் சோப்பு டப்பா கார்கள், பொம்மை கார்கள் என பலர் கிண்டல் செய்து வந்த நிலையில் எலெக்ட்ரிக் காரில் தரமான காரை தயாரித்து, அதுவும் தானியங்கி காராக வடிவமைத்து விற்பனைக் கொண்டு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் காட்டிய நிறுவனம் அது.

இந்த டெஸ்லா நிறுவனத்தை உருவாக்கியதால் அதன் உரிமையாளர் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரராக மாறியுள்ளார். இதற்கு முக்கியமான காரணம் டெஸ்லா காரின் தானியங்கி தன்மை மற்றும் பேட்டரியில் இயங்கும் தன்மைதான். மக்கள் பலர் அந்த டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விரும்புகின்றனர். இந்தக் காருக்கான செலவும் குறைவு அதே நேரம் அதிக வசதிகளும் இந்த காரில் இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது. டெஸ்லா போன்ற பெரும் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் தனது ஆலையை அமைத்து உற்பத்தியை மேற்கொள்ள திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக டெஸ்லா நிறுவனத்தின் ஆலையை அமைக்க இடம் தேடும் பணியை தற்போது நடந்து வருகிறது.டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது அந்நிறுவனத்தின் ஆலையை அமைந்துள்ள பகுதிக்கு மிகப்பெரும் வளர்ச்சியை தரும் என்பதால் அந்த ஆலையை ஈர்க்க பல மாநிலங்களுக்கிடையே போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெஸ்லா ஆலையே தமிழகத்திற்கு இருக்க தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தீவிரமாக முயற்சி செய்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் ஓலா, ஏத்தர், சிம்பிள் எனர்ஜி போன்ற எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இதுபோக ஹூண்டாய், நிஸான், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் கம்பேஷன் இன்ஜின் வாகனங்களை தமிழகத்தில் ஆலை அமைத்து தான் தயாரித்து வருகின்றனர். இதனால் தமிழகம் ஆட்டோ மொபைல் ஆலைகளை தன்வசம் இருப்பதில் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது டெஸ்லா நிறுவனத்தின் ஆலையும் தமிழகத்திற்கு ஈர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
டெஸ்லா ஆலை இந்தியாவிற்கு வரும்போது தனது ஆலையை நிறுவ பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கிறது. இந்த சலுகைகளை வழங்கும் வகையில் தான் தமிழக அரசு தனது எலக்ட்ரிக் வாகனக் கொள்கையை சமீபத்தில் அறிவித்தது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தங்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தை தன் மாநிலத்திற்குள் ஈர்க்க தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலமும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் தான் இந்த ஆலை அமைய அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து செய்வது சுலபமாக இருக்கும் என்பது தான்.
இந்தியாவில் டெஸ்லா தனது கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை அருகே ஆலையை அமைப்பதன் மூலம் சென்னை துறைமுகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
ஏற்கனவே சென்னையில் நிஸான் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 5300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை விரிவு படுத்துகிறது. அங்கு தற்போது எலெக்ட்ரிக் கார்களையும் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் தன் ஆலையை அமைக்க சிறந்த இடமாக இருக்கும் என யோசித்து வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் ஆலையை தமிழகத்தில் அமைந்தால் இங்கு பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அந்நிறுவனத்தை சார்ந்த மற்ற நிறுவனங்களில் வளர்ச்சி அதிகமாகும். அந்நிறுவனம் அமைய உள்ள பகுதியில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். என்ன நடக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் ஆலை அமைக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். கியா நிறுவனத்தின் ஆலை தமிழகத்தில் அமைய போவதாக இருந்தது கடைசி நேரத்தில் அது ஆந்திர மாநிலத்திற்கு சென்றது. அதுபோல இல்லாமல் தமிழக அரசு டெஸ்லா ஆலையே தமிழகத்திற்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








