டிவி சீரியல் ஆக்டர்களிடம் இவ்ளோ விலை உயர்ந்த காரா? யார் யார் எந்தெந்த விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துறாங்க?..
பாலிவுட் சின்னத் திரையைச் சேர்ந்த நடிகர்கள், முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் போலவே தமிழ் சின்ன திரையைச் சேர்ந்த நடிகர்கள் சிலரும் ஆடம்பர மற்றும் மிக மிக விலையுயர்ந்த கார்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்து வருகின்றனர்.
குக்-வித் கோமாளி, மணி மேகலை தொடங்கி, ராஜா ராணி, ஆல்யா மானசா வரையில் என எக்கசக்க நடிகைகள், நடிகர்கள் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களை உபயோகித்து வருகின்றனர். அந்தவகையில், யார் யார் சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர்?, அவர்களிடத்தில் என்ன மாதிரியான சொகுசு வாகனம் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள், போகலாம்.

நெஞ்சம் மறப்பதில்லை - ஷரண்யா துரடி
தமிழ் சின்ன திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஷரண்யா துரடி அறியப்படுகின்றார். இவர் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற முன்னணி டிவி சீரியலில் நடித்திருக்கின்றார். இவரிடம் மிக மிக விலையுயர்ந்த காராக பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சீரிஸ் கார் இருக்கின்றது. இந்த காரை கடந்த மார்ச் மாதமே அவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர் மிகப் பெரிய பிஎம்டபிள்யூ தயாரிப்பின் பிரியர் என அறியப்படுகின்றது. உதற்காக, ஷரண்யாவிடம் பிஎம்டபிள்யூ சொகுசு கார் மட்டுமின்றி பைக்குகளும் பயன்பாட்டில் உள்ளன. பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பிரீமியம் பைக்கையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த பைக்கின் விலை ரூ. 3.20 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.

இதைபோலவே அவர் பயன்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சீரிஸ் சொகுசு காரின் விலையும் பல மடங்கு அதிகமாதனதாகக் காட்சியளிக்கின்றது. சொகுசு காரின் விலை ரூ. 78 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பல மடங்கு அதிக விலைக் கொண்ட காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

பகல் நிலவு - ஷிவானி நாராயணன்
பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்று இன்னும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் தமிழ் பிக்-பாஸ் சீசன் 4 டிவி நிகழ்ச்சியில் தோன்றியதன் வாயிலாகவே நாடு முழுவதும் அறியப்படும் நபராக ஷிவானி நாராயணன் மாறினார். இவரிடத்தில் பன்முக ஆடம்பர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
அனைத்தைக் காட்டிலும் மிக விலையுயர்ந்த காராக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இருக்கின்றது. இந்த காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார். மிக சமீபத்திலேயே இந்த கார் வாங்கப்பட்டது. இதன் விலை ரூ. 1.2 கோடிக்கும் அதிகம் ஆகும். மிக மிக அதிக சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த லக்சூரி கார் மாடலே இது ஆகும்.

பிக்பாஸ் - பாலாஜி முருகதாஸ்
பாலாஜிமுருகதாஸ், மாடலாக பல ஆண்டுகளாக வலம் வந்திருந்தாலும், பிக்-பாஸ் சீசன் 4 வாயிலாகவே பலர் அறியப்படும் முகமாக பாலா மாறினார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு காரையே இவர் பயன்படுத்தி வருகின்றார். இவரிடம் இருப்பது செடான் ரக சொகுசு காராகும். இதுதவிர சில ஆடம்பர இருசக்கர வாகனங்களும் பாலாவிடம் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சொகுசு காரை 2022ஆம் ஆண்டு ஜூலையிலேயே வாங்கினார். இவரின் இந்த கொள்முதலுக்கு பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வாணி ராணி - அருண் குமார் ராஜன்
கல்யாண பரிசு, இளவரசி, வாணி ராணி, அழகி என பல முன்னணி டிவி சீரியல்களில் நடித்தவரே அருண் குமார் ராஜன். இவரிடத்திலும் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் சமீபத்திலேயே மஹிந்திரா தார் காரை வாங்கியதாகக் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் 30லேயே கருப்பு நிற தார் எஸ்யூவியை வாங்கினார். இதனுடன் சேர்த்து அருண் இடத்தில் தற்போது ஐந்துக்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

குக்-வித் கோமாளி - மணி மேகலை
பாடல்கள் ஒளிபரப்பும் சேனல் வாயிலாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கியவர் மணிமேகலை. இதன்பின்னர் குக்-வித் கோமாளி எனும் உலக புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக தோன்றினார். இவரிடத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு கார் பயன்பாட்டில் இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த கார் வாங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ.55.36 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். விலைக்கு ஏற்ப சொகுசு வசதிகளும் இந்த காரில் மிகமிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராஜா ராணி - ஆல்யா மானசா
ஆல்யா மானசா - சஞ்ஜீவ் கார்த்திக் ஜோடிகளால் இணைந்து வாங்கப்பட்டதே மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு கார் ஆகும். இதுபோன்ற ஓர் காரை வாங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவு என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இக்காரை அவர்கள் வாங்கி இருக்கின்றனர்.
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் விலை ரூ. 57.20 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். உயர்நிலை தேர்வு ரூ. 63 லட்சத்திற்கும் அதிகமான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த வாகனத்தையே ஆல்யா மனசா மற்றும் சஞ்ஜீவ் ஜோடி பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









