தமிழ்நாட்டில் ரூ50 ஆயிரம் கோடி முதலீடு; 1.5 லட்சம் பேருக்கு வேலை - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்ஸர்!
தமிழ்நாடு அரசு நேற்று தனது மாநிலத்திற்கான எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ50 ஆயிரம் கோடி முதலீடும், 1.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கப்போகிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தற்போது உள்ள கம்பஷன் இன்ஜின் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என யோசித்து வருகிறது. உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வருவது மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உலகைக் கொண்டு செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் பூமி சூடாவது முதல் பல பிரச்சனைகள் நடக்கிறது.

உலகில் ஏற்படும் ஒட்டு மொத்த காற்று மாசுவில் வாகன பயன்பாட்டின் மூலம் ஏற்படும் மாசு தான் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் உலக நாடுகள் முழுவதும் படிப்படியாக கம்பஷன் இன்ஜின் வாகனங்களைக் குறைத்து மாசு ஏற்படுத்தாத வாகனங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மாசு ஏற்படுத்தாத வகை வாகனம் என்றால் எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் வாகனம் தான்.
இதையடுத்து இந்தியா அரசு தனக்கென ஒரு எலெக்ட்ரிக் வாகன கொள்கையை ஏற்படுத்தியது. மேலும் மாநில அரசுகளுக்கும் அவரவர்களுக்கு ஏற்றபடி கொள்கையை உருவாக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசு தனக்கென ஒரு எலெக்ட்ரிக் வாகன கொள்கையை ஏற்படுத்தியது. இதை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த கொள்கையின் முக்கிய அம்சமாக வரும் 2025ம் ஆண்டு வரை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைவேட் கார், டூ-வீலர், 3 வீலர், ஆட்டோ ரிக்ஷா, போக்குவரத்து வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியன இந்த கொள்கை திட்டத்திற்குள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல இந்த கொள்கையின்படி தமிழக அரசின் போக்குவரத்துத் துறையையும் எலெக்ட்ரிக் மயமாக்குவதையும் அறிவுறுத்துகிறது. அதன் மூலம் தமிழக அரசு வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது, எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களை அதிகப்படுத்துவது, ஆட்டோமொபைல் உதிரிப்பாக விற்பனையை அதிகரிப்பது, அதிக திறன் கொண்ட வேலையாட்கள் மற்றும் ஆய்வு மேம்பாடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் அதிகரிப்பது குறித்துக் கொள்கையை வகுத்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முதன்மையில் இருக்கிறது. கிட்டத்தட்ட எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியின் மையமாகவே மாறியுள்ளது. புதிய நிறுவனங்களான ஏத்தர், ஓலா, சிம்பிள் எனர்ஜி போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தான் தனது ஆலையை அமைத்துத் தயாரிப்பு நடத்தி வருகின்றனர். 2023ம் ஆண்டு இறுதி வரைக்கும் இதே டிரெண்ட் நிச்சயம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இதை நீட்டிப்பு செய்ய இந்த தமிழக அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் அரசு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களிடம் செய்ய வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை தமிழக அரசு இப்படியாக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் தமிழகத்தில் ரூ24 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். இதுவரை 48 ஆயிரம் பேருக்கு நேரடியாகும் மறைமுகமாகவும் வேலை கிடைத்ததுள்ளது.
தமிழக அரசு இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் முதலீட்டை ரூ50 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கவும், எலெக்ட்ரிக் வாகன துறையில் 1.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கச் செய்யவும் திட்டங்களை வகுக்க வழிகளை செய்துள்ளது. இதனால் தமிழகம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பின் மையமாகச் செயல்படும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








