கொடி பறக்குதா! சத்தமே இல்லாம டாடா செய்த தரமான சம்பவம்! மாருதிக்கு இந்நேரம் மூக்கு மேல வேர்த்திருக்கும்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டுள்ளது. இங்கு 100 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் சுமார் 85 எலெக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையதுதான். இது சாதாரண விஷயம் அல்ல.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் தற்போது புதிய மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. இந்தியாவில் 1 லட்சம் (1 Lakh) எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்பதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அந்த புதிய மைல்கல்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Charging Stations) போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மிகப்பெரிய அளவில் வளரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போதே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருப்பது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனைதான் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.
தங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் ஒட்டுமொத்தமாக 1.40 பில்லியன் கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தற்போது தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 2,19,432 டன்கள் கார்பன் உமிழ்வை குறைத்துள்ளனர். அத்துடன் எரிபொருள் செலவில் 7 பில்லியன் ரூபாயை சேமித்துள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரானது, ப்ரைம் (Prime) மற்றும் மேக்ஸ் (Max) என 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுவாக்கி கொள்வதற்காக வரும் காலங்களில் இன்னும் நிறைய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. நாங்கள் மேலே கூறியுள்ள 3 புதிய எலெக்ட்ரிக் கார்களில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஏற்கனவே விற்பனையில் உள்ள நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொடிதான் பறக்க போகிறது என்பது உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார் சந்தையின் 'கிங்' என வர்ணிக்கப்படும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தி விட்டது.
எனவே இந்தியாவின் கார் சந்தையில் எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏனெனில் எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என்னும் சூழல் மிக வேகமாக உருவாகி கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிப்பதைதான் விரும்புகின்றன.


Click it and Unblock the Notifications








