டாடாவின் புது கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! ஷோரூம்களுக்கு வர ஆரம்பிச்சிருச்சு! இன்னும் சில நாட்களில் டெலிவரி!

இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்களுக்கான (CNG Cars) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்றாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG) ஆகிய சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது.

Tata Altroz CNG

இது இந்தியாவில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஆகும். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கார்களின் பூட் பகுதியில் பொருட்களை வைப்பதற்கான இடவசதியில் பற்றாக்குறை ஏற்படுதை, இந்த தொழில்நுட்பம் நிவர்த்தி செய்கிறது. எனவே சிஎன்ஜி கார்களில் தனித்துவமான ஒன்றாக இது கருதப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Tata Altroz CNG Front Design

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை புக்கிங் செய்து கொள்ளலாம். டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் நடப்பு மே மாத மத்தியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்னும் ஒரு சில நாட்களில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் விலை (Price) அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள டாடா டீலர்ஷிப்களுக்கு, அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் தற்போது வர தொடங்கியுள்ளது. அறிமுக நாள் நெருங்கி விட்டதை இது நமக்கு உணர்த்துகிறது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG) மற்றும் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG) கார்களுக்க நேரடி போட்டியாக, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி களமிறக்கப்படவுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

பெட்ரோல் மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 87 பிஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் ஆக உள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 76 பிஹெச்பி மற்றும் 97 என்எம் டார்க் ஆக குறைந்து விடும். எனினும் நீங்கள் சிறப்பான மைலேஜை (Mileage) எதிர்பார்க்கலாம்.

அனேகமாக டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 27-30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சிஎன்ஜி கார்களில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். வசதிகளை (Features) பொறுத்தவரையில் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆம்பியண்ட் லைட்டிங் உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) போலவே, சிஎன்ஜி கார்களும் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்த நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கவனத்தை சிஎன்ஜி கார்களின் மீது திருப்பியிருப்பது நல்ல விஷயம்தான். முன்னதாக எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடாதான் நம்பர்-1 நிறுவனமாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 10, 2023, 23:49 [IST]
English summary
Tata altroz cng arrives at dealerships mileage features all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+