டாடாவின் புது கார் இவ்ளோ மைலேஜை வாரி வழங்குமா! மாருதி பிஸ்னஸ் படுக்க போகுது! இதைதான் ரொம்ப நாளா எதிர்பாத்தோம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் சிஎன்ஜி (CNG) மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதன் விலை (Price) எவ்வளவு? என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தப்பட்டு விட்டது.

இதை தொடர்ந்து இன்று விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மாறாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. எனினும் இன்னும் ஒரு சில நாட்களில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலை, டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மே மாதத்தில் இருந்து தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் (Gearbox) இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மோடில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மோடில், இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 76 பிஹெச்பி மற்றும் 97 என்எம் டார்க் மட்டுமே.
சிஎன்ஜி மோடில் பவர் அவுட்புட் குறைந்தாலும் கூட, நல்ல மைலேஜ் (Mileage) கிடைக்கும். டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு தோராயமாக 27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. XE, XM+, XZ மற்றும் XZ+ என மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடல் கிடைக்கும்.
அத்துடன் ஒபேரா ப்ளூ, டவுன்டவுன் ரெட், அவென்யூ ஒயிட் மற்றும் ஆர்கேட் க்ரே என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடல் விற்பனை செய்யப்படும். டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலில், பல்வேறு தனித்துவமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி மோடிலேயே காரை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பது இதில் முக்கியமான ஒன்றாகும்.
இதுதவிர ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பமும் இந்த புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 சிலிண்டர்களின் கொள்ளவு திறன் தலா 30 கிலோ ஆகும். இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலிலும் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், 6 ஏர்பேக்குகள், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி பலேனோ சிஎன்ஜி (Maruti Baleno CNG), டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG) கார்களுக்கு, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலின் வருகை நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஏற்கனவே குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கி, டாடா அல்ட்ராஸ் பாதுகாப்பான காராக திகழ்கிறது. இனி சிறப்பான மைலேஜையும் வழங்கும் என்பதால், அதன் விற்பனை உயரலாம்.


Click it and Unblock the Notifications








