Tata Altroz CNG மைலேஜை வாரி வழங்கும் கார் இன்னும் ஒரே நாளில் அறிமுகம்! எக்கசக்கமான வசதிகளுடன் வர போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய கார்களுடன், டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது.

இதில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய கார்களில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டாடா அல்ட்ராஸ் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. எனவே அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா முடிவு செய்தது.

Tata Altroz CNG Teaser

இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி (Tata Altroz iCNG) என்ற பெயரில், இந்த புதிய மாடல் காட்சிப்படுத்தப்பட்டது.

சுமார் 3 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது முழுமையாக தயாராகி விட்டது. ஆம், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் அதிகாரப்பூர்வமான டீசர் (Teaser), தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் அறிமுக தேதி (Launch Date) குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் வரும் ஏப்ரல் 19ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இடையில் இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு வேரியண்ட் என்றாலும், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது என நாம் உறுதியாக நம்பலாம்.

ஏனெனில் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை என ஏராளமான வசதிகள், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம். டாடா அல்ட்ராஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதன் சிஎன்ஜி மாடல் என்பதால், பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

செயல்திறனை பொறுத்தவரையில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோல் மூலம் இயங்கும்போது அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, இந்த இன்ஜின் பவர் அவுட்புட் 76 பிஹெச்பி மற்றும் 97 என்எம் டார்க் ஆக குறைந்து விடும்.

எனினும் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. இந்த புதிய மாடலில், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த செக்மெண்ட்டில், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ள முதல் கார் இதுதான்.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் விலை (Price) நாளை மறுநாள்தான் அறிவிக்கப்படவுள்ளது. இருப்பினும் பெட்ரோல் வேரியண்ட்டை காட்டிலும், 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அதிகப்படியான விலையில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் விற்பனைக்கு களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக சிஎன்ஜி விலை (CNG Price) சமீபத்தில் வெகுவாக குறைந்துள்ளதால், சிஎன்ஜி கார்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி களமிறங்கவுள்ளதால், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 17, 2023, 23:35 [IST]
English summary
Tata altroz cng launch date teaser expected price mileage features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+