27 கிமீ மைலேஜ் குடுக்கும் டாடா கார்! பாதுகாப்பு இருக்கு... ஆனா மைலேஜ் இல்லனு கிண்டல் பண்ணவங்களுக்கு பதிலடி!
இந்தியாவை சேர்ந்த கார் ரசிகர்களுக்கு நாளை (ஏப்ரல் 19) பொன்னான நாள். ஏனெனில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் 2 முக்கியமான கார்கள் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளன. அந்த 2 கார்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG): இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷன்தான் இது. இதில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 பிஹெச்பி பவர் மற்றும் 97 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
சிஎன்ஜி மூலம் இயங்கும்போது பவர் அவுட்புட் சற்று குறைந்தாலும், நீங்கள் சிறப்பான மைலேஜை (Mileage) எதிர்பார்க்கலாம். அனேகமாக டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு சுமார் 27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற பெரும்பாலான சிஎன்ஜி கார்களை போல் அல்லாமல், ட்யூயல் சிலிண்டர்களுடன் (ஒவ்வொன்றும் தலா 30 லிட்டர்கள்) டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் வரவுள்ளது. இந்த ஏற்பாடு, பூட் ஸ்பேஸ் விஷயத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய சிறப்பம்சம் ஆகும்.
டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், 6 ஏர்பேக்குகள், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG) மற்றும் மாருதி பலேனோ சிஎன்ஜி (Maruti Baleno CNG) ஆகிய கார்களுடன், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி போட்டியிடும்.
எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இது 4 இருக்கைகளை மட்டுமே கொண்ட சிறிய எலெக்ட்ரிக் கார். இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 2974 மிமீ, 1505 மிமீ மற்றும் 1631 மிமீ.
அனேகமாக 20 kWh திறனுடைய பேட்டரி தொகுப்பு, எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் (Range) 250 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் கார் நாளை அதிகாரப்பூர்வமான தகவல்களுடன், பொது பார்வைக்கு (Unveil) மட்டுமே கொண்டு வரப்படுகிறது.
இதை தொடர்ந்து அடுத்த ஒரு சில மாதங்களில் விலை (Price) அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். ஆனால் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் (Launch) செய்யப்படுகிறது. எனவே நாளை இதன் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார், எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் கார் ஆகிய இரண்டுமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்கள் ஆகும். எனவே இந்த 2 கார்களுமே விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








