சிலிண்டர் இருந்தாலும் இடவசதி குறையாது! நிறைய லக்கேஜ் வெச்சுக்கலாம்! டாடா மாதிரி வேற யாருமே இப்படி யோசிக்கல!
பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை (Price) உயர்வு காரணமாக வாடிக்கையாளர்கள் பலரின் கவனம் தற்போது சிஎன்ஜி கார்கள் (CNG Cars) மீது திரும்பி வருகிறது. எனவே மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) உள்பட பல்வேறு நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்று. ஏற்கனவே டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG), டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG) ஆகிய சிஎன்ஜி கார்களை டாடா விற்பனை செய்கிறது. இந்த வரிசையில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG), டாடா பன்ச் சிஎன்ஜி (Tata Punch CNG) என 2 புதிய சிஎன்ஜி கார்களை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா காட்சிக்கு வைத்தது.

2023 ஆட்டோ எக்ஸ்போ கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி விட்டது. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்துவதன் மூலம் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை நீங்கள் புக்கிங் செய்து கொள்ள முடியும்.
சிஎன்ஜி கார்களில் ஒரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. பின் பகுதியில் பெரிய சிலிண்டர் இருக்கும் என்பதால், பூட் ஸ்பேஸ் (Boot Space) பாதிக்கப்படும். எனவே லக்கேஜ்களை வைக்க சிரமப்பட நேரிடும். ஆனால் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் அந்த பிரச்னை இல்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்திசாலித்தனமாக அறிமுகம் செய்துள்ள ஒரு தொழில்நுட்பம்தான் இதற்கு காரணம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் தற்போது சிங்கிள் சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது பெரிய சிலிண்டர் என்பதால், இடத்தை ஆக்ரமித்து கொள்ளும். ஆனால் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் புத்திசாலித்தனமாக சிறிய அளவில் 2 சிஎன்ஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தலா 30 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டவை ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இப்படி ஒரு யுக்தியை கையாண்டுள்ளதால், பூட் ஸ்பேஸ் விஷயத்தில் நீங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த காரின் வசதிகள் (Features) பற்றி விளக்கும் வீடியோ (Video) ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், சன்ரூஃப் வசதி வழங்கப்படவுள்ளது. இதுதவிர டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வசதியும், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகிய வசதிகளும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் XE, XM+, XZ மற்றும் XZ+ என டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும்.
வழக்கமான டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான், சிஎன்ஜி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோல் மூலம் இயங்கும்போது அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 பிஹெச்பி பவர் மற்றும் 97 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். பவர் அவுட்புட் குறைவு என்றாலும் கூட, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 27 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் மே மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக இன்னும் ஒரு சில நாட்களில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் பூட் ஸ்பேஸ் சமரசம் செய்யப்படவில்லை. அத்துடன் ஏராளமான வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே போட்டி மாடல்களான மாருதி பலேனோ சிஎன்ஜி (Maruti Baleno CNG) மற்றும் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG) ஆகிய கார்களுக்கு, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலின் வருகை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாருதி பலேனோ சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 8.35 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.28 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 8.50 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.53 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். 4 வேரியண்ட்கள் இருப்பதால், இதைக்காட்டிலும் குறைவான விலையில் அல்ட்ராஸ் சிஎன்ஜி களமிறக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








