மத்தவங்க பொறாமைபட்ற அளவுக்கு மைலேஜ் தரும் டாடா கார்! மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் தலையில் இடியை இறக்கீட்டாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). நடப்பு 2023ம் ஆண்டில், இதன் 2 புதிய வேரியண்ட்களை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதில், சிஎன்ஜி (CNG) வேரியண்ட் ஒன்றாகும். டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 77 பிஎஸ் பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மத்தவங்க பொறாமைபட்ற அளவுக்கு மைலேஜ் தரும் டாடா கார்! மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் தலையில் இடியை இறக்கீட்டாங்க!

அனேகமாக வரும் ஜூன் மாதத்திற்குள், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், எல்இடி பகல் நேர விளக்குகள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் பகுதியில் ஏசி வெண்ட்கள் என டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்தவங்க பொறாமைபட்ற அளவுக்கு மைலேஜ் தரும் டாடா கார்! மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் தலையில் இடியை இறக்கீட்டாங்க!

இதுதவிர உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கை போன்ற வசதிகளையும் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் பெற்றுள்ளது. அத்துடன் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார், சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என்பதால், இந்த புதிய மாடல் மீது வாடிக்கையாளர்களுக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG) காருக்கு நேரடி போட்டியாக, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்படவுள்ள மற்றொரு புதிய வேரியண்ட் ரேசர். 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) காரும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) காருக்கு நேரடி போட்டியாக, டாடா அல்ட்ராஸ் ரேசர் களமிறங்கவுள்ளது. டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வென்டிலேட்டட் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 11, 2023, 8:48 [IST]
English summary
Tata altroz cng racer india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+