Tata Altroz iCNG காரில் இரண்டு சிலிண்டர் கொண்டு வந்ததுக்கு இது தான் காரணமா? செமயா யோசிச்சிருக்காங்கபா!

டாடா நிறுவனம் தனது பிரிமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷனாக அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வழக்கமான சிஎன்ஜி காராக இல்லாமல் ட்வின் சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி காராக அறிமுகமாகியுள்ளது. இதை பற்றி விரிவாக காணலாம்.

டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காரை பற்றி தெரிந்து கொள்ளும் முன் சிஎன்ஜி பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சிஎன்ஜி என்பது Compressed Natural Gas என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் தான். இது முதன் முறையாக 1850ம் ஆண்டு இன்டர்னல் கம்பஷன் இன்ஜினில் டெஸ்ட் செய்யப்பட்டது.

Tata Altroz iCNG Twin Cylinder Technology

அதன் பின்னர் முதல் உலகப்போர் சமயத்தில் சிஎன்ஜி வாகனங்களின் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. 1960களில் கப்பல்களில் கூட எரிபொருளாக சிஎன்ஜி பயன்படுத்தப்பட்டது. இது மெல்லமெல்ல பயன்பாட்டிற்கு வந்து இன்று உலகம் முழுவதும் 1.40 கோடி சிஎன்ஜி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது சிஎன்ஜி கார்கள் என்றால் காரின் பூட் பகுதியில் சிஎன்ஜி டேங்க் அமைப்பார்கள். சுமார் 60 லிட்டர் டேங்க் அமைக்கப்படும். இதனால் பெட்ரோல் காரை விட சிஎன்ஜி கார்களில் பூட் வசதி குறைவாக இருக்கும். இது சிஎன்ஜி கார்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது.

Tata Altroz iCNG Twin Cylinder Technology

இந்நிலையில் தான் டாடா நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் தனது டியாகோ மற்றம் டிகோர் கார்களில் சிஎன்ஜின வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. அது சாதாரண சிஎன்ஜி காராக தான் இருந்தது. அதன் பின்னர் தற்போது தனது பிரிமியர் ஹேட்ச் பேக் காரான அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் டாடா நிறுவனம் பிரிமியம் கார் என்பதால் பூட்வசதி குறையக்கூடாது, அதே நேரம் சிஎன்ஜி வைப்பவதால் காரின் கட்டமைப்பு வசதிகளை பெரிய அளவில் மாற்ற முடியாது. இதை யோசித்து இதற்கு ஒரு தீர்வாக தான் ட்வின் சிலிண்டர் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொழிற்நுட்பத்தின் படி மொத்தம் உள்ள 60 லிட்டர் சிலிண்டரை 30 லிட்டர் சிலிண்டராக மாற்றி 2 சிலிண்டர்களை பொருத்துகிறது. 2 சிலிண்டராக பிரிவதால் அதன் அளவு குறைகிறது. இதனால் அந்த சிலிண்டரை காரின் பூட் பகுதிக்கு கீழே பொருத்த முடியும். தற்போது பூட்பகுதிக்கு கீழே ஸ்பேர் வீல் இருக்கிறது.

டாடா நிறுவனம் இந்த ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி கார்களில் அந்த ஸ்பேர் வீலை அகற்றிவிட்டு அங்கு இந்த சிலிண்டர்களை பொருத்தும் பணியை செய்கிறது. அதே நேரம் இந்த ஸ்பேர் வீலை வைக்க காருக்கு அடியில் பின்பக்கத்தில் உள்ள இரு வீல்களுக்கு இடையே இட வசதியை வழங்கியுள்ளது. இன்னோவா போன்ற கார்களில் இப்படிதான் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த பூட் வசதி வேறு எந்த சிஎன்ஜி கார்களிலும் கிடையாது. சிஎன்ஜி கார்களில் உள்ள பிரச்சனையை இந்த ட்வின் சிலிண்டர் தொழிற்நுட்பம் சரி செய்துவிட்டது. இந்த ட்வின் சிலிண்டர் தொழிற்நுட்பத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது. இதன் பயன்பாட்டில் ஒரு ஒரு சிலிண்டராக தான் சிஎன்ஜியை எடுக்கும். முதல் சிலிண்டர் காலியான பிறகு இரண்டாவது சிலிண்டர் என சிஎன்ஜியை காலி செய்யும்.

இந்த ட்வின் சிலிண்டர் தொழிற்நுட்பத்திற்கு பின்னால் ஒரு பாதுகாப்பு அம்சமும் நிறைந்திருக்கிறது. சிஎன்ஜி சிலிண்டர் இரண்டாக இருப்பதால் ஒரே சிலிண்டராக இருப்பதை விட அதிக பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்கும். பாதுகாப்பு விஷயத்திலும் ட்வின் சிலிண்டர் ஒற்றை சிலிண்டர் சிஎன்ஜியை காட்டிலும் சிறப்பாக இருக்கும்.

இந்த டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மூலம் இயங்கும் போத அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மூலம் இயங்கினால் 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு கண்டுபிடிப்பு என்பது நாம் பிரச்சனைகளை சந்திக்கும் போது தான் உருவாகிறது. அப்படியாக சிஎன்ஜியில் பூட் ஸ்பேஸ் பிரச்சனைகளை சந்திக்கும் போது தான் டாடா நிறுவனம் ட்வின் சிலிண்டர் என்று அதற்கான ஒரு தீர்வை முன் வைக்கிறது. இப்படியான கண்டுபிடிப்புகளை வரவேற்க வேண்டும். இந்த தொழிற்நுட்பம் வருங்காலங்களில் எல்லா சிஎன்ஜி கார்களிலும் வரவேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 13:22 [IST]
English summary
Tata altroz cng twin cylinder technology explained full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+