பலினோ சிஎன்ஜிக்கு ஆப்பு ரெடி... தயார் நிலையில் நம்ம டாடாவோட தயாரிப்பு!
டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை நிறுவனம் இதுபோன்று வெளியீடு செய்வது இதுவே முதல் முறை ஆகும். இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான கார் மாடல்களில் அல்ட்ராஸும் ஒன்று. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகும். மாருதி சுஸுகியின் பலினோ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இது இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமான முயற்சியிலேயே டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை களமிறக்கும் முயற்சியிலேயே நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

சிஎன்ஜி கிட் பொருத்தியதை தவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் இந்த காரில் டாடா செய்யவில்லை. ஆகையால், வழக்கமான அல்ட்ராஸ் காருக்கும், இதற்கும் பெரிய அளவில் வித்தியாசத்தை காண முடியாது. அதேநேரத்தில் மைலேஜ் விஷயத்தில் இந்த கார் வழக்கமான அல்ட்ராஸைக் காட்டிலும் மிக சிறந்த வெர்ஷனாக சிஎன்ஜி அல்ட்ராஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் இந்த காரை ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கி இருக்கின்றது.
இந்த பிளாட்பாரத்தினாலேயே அல்ட்ராஸ் மிகவும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காராக இருக்கின்றது. அதேவேளையில், கணிசமான சில மாற்றங்களையும் இந்த காரில் டாடா செய்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. வீல் ஆர்ச்சுகள் மற்றும் காரின் வெளிப்புறத்தில் கணிசமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்போர்ட் பிளாக் நிறத்தினாலான விண்டோக்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, காரின் முகப்பு பகுதியிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டார்க் குரோம் ஸ்லேட் ரக அணிகலனே க்ரில்லுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் ரெவட்ரோன் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 97 என்எம் டார்க்கை 3,300 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். சிஎன்ஜி மோடில் இயங்கும்போதே இந்த அளவு பவரை வெளியேற்றும். இதுவே, பெட்ரோலில் இயங்கும்போது இதே மோட்டார் கூடுதல் பவரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அல்ட்ரஸ் சிஎன்ஜி எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த கூடுதல் விபரங்களை நிறுவனம் வெளியடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இன்று நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அல்ட்ராஸ் சிஎன்ஜி-யை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வருவது மட்டுமே டாடாவின் கனவு அல்ல.

மின்சார வெர்ஷனையும் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் திட்டத்தில் டாடா இருக்கின்றது. இந்த வெர்ஷனின் வருகையும் வெகு விரைவில் இந்தியாவில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் போட்டியே இல்லாத நிலையில் இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








