இந்த நிறுவனத்தோட கார் இவ்ளோ உறுதியானதா!.. 180 அடி ஆழ பள்ளத்துல விழுந்தும் ஒன்னும் ஆகல!
கார் ஒன்று 180 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தபோதிலும் அந்த காரில் பயணித்தவர்களுக்கு ஒன்னுமே ஆகவில்லை என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நிறுவனத்தின் கார்?, பயணிகள் தப்பிய விதம் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கார் ஒன்று 180 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மஹாராஷ்டிர மாநிலம் புனேவிலேயே இந்த கொடுமையான விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

அதேவேளையில், கார் முழுவதுமாக உருக்குலைந்து போயிருக்கின்றது. நல்லவேளையாக அதில் இருந்த பயணிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த தகவலே பெருத்த ஆச்சரியத்தையும், நம்மை பெருமூச்சை விடவும் செய்திருக்கின்றது. மேலும், இவ்வளவு மோசமான விபத்தைச் சந்தித்தபோதிலும் உயிர் சேதமின்றி பயணிகளைக் காத்திருக்கும் அந்த கார் என்ன கார் மாடல் என்கிற கேள்வியையும் நம்மிடையே எழும்ப செய்திருக்கின்றது. அது ஓர் டாடாவின் தயாரிப்பாகும்.
டாடா மோட்டார்ஸின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக அல்ட்ராஸ் இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த காரே 180 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகிய வாகனமாகும். இந்த கார் எத்தகைய பாதுகாப்பு திறன் கொண்டது என்பது உலகம் அறிந்த தகவல் ஆகும்.

ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்த காரே டாடா அல்ட்ராஸ் ஆகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த தரமான ரேட்டிங்கை அல்ட்ராஸ் பெற்றது. தன்னுடைய இந்த தனி திறனையே நிஜ விபத்து சம்பவத்தில் டாடா அல்ட்ராஸ் நிரூபித்துக் காட்டி இருக்கின்றது.
டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் காரை ஆல்ஃபா ஆர்க்கைக் கொண்டு தயாரித்து இருக்கின்றது. இந்த உடல் அமைப்பு மிக வலுவான தாக்கங்களைகூட தன்னுள் வாங்கிக் கொண்டு பயணிகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூப்பரான பவரையே புனேவில் நடைபெற்ற விபத்து நிகழ்வில் அல்ட்ராஸ் வெளிக்காட்டி இருக்கின்றது.
இதுதவிர, பிரேக் ஸ்வே கன்ட்ரோல் உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டூயல் ஏர் பேக் (முன் பக்கத்தில்), ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கரேஜ் கொண்ட இருக்கைகள், ஐடிபிஎம்எஸ், பார்க்கிங் அசிஸ்டன்ஸ் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் சீட் பெல்ட் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் அல்ட்ராஸில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவேதான் இந்த காரால் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற முடிந்திருக்கின்றது. இந்த ரேட்டிங்கை பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் பலரின் பிரியமான காராக அல்ட்ராஸால் மாற முடிந்திருக்கின்றது.
அல்ட்ராஸ் வழக்கமான தேர்வுடன் சேர்த்து 'டார்க்' எனும் சிறப்பு பதிப்பிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், கூடுதலாக ஐசிஎன்ஜி தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரைவில் இந்த தேர்வுகளில் மின்சார வெர்ஷனும் இணைக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
டாடா அல்ட்ராஸின் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட தேர்வு ரூ. 6.59 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், டீசல் எஞ்ஜின் தேர்வு ரூ. 8.14 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் மற்றும் ஐ-டர்போ மோட்டார் ரூ. 9.09 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதன் சிஎன்ஜி தேர்வின் ஆரம்ப விலை ரூ.7.55 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே புனேவில் அரங்கேறி இருக்கும் டாடா அல்ட்ராஸ் விபத்து சம்பவம் அமைந்திருக்கின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த காரில் பயணித்தவர்கள் அனைவரும் உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த சம்பவத்தின் வாயிலாக சாலையில் பயணிக்கும் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்கிற பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








