டாடாவினால் மட்டுமே இதெல்லாம் முடியும்.. சன்ரூஃப் வசதி உடன் குறைவான விலையில் அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி (Altroz iCNG) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட சிஎன்ஜி காராக இதனை டாடா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருந்த சிஎன்ஜி (CNG) கார் மாடல்களில் ஒன்றே டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி (Tata Altroz iCNG). இந்த கார் மாடலே தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுகமாக ரூ. 7.55 லட்சம் அக்காருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tata altroz icng launched

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டூயல் சிலிண்டர் (Dual Cylinder) செட்-அப் உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் சிஎன்ஜி கார் இதுவாகும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாக இந்த அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி உருவாக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், சன்ரூஃப் வசதி இந்த மலிவு விலை சிஎன்ஜி காரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அனைத்து அம்சங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக கிடைக்கும்.

Tata altroz icng touch screen

எக்ஸ்இ (XE), எக்ஸ்எம் பிளஸ் (XM+), எக்ஸ்எம்பிளஸ் (எஸ்) XM+ (S), எக்ஸ்இசட் (XZ), எக்ஸ் இசட் பிளஸ் (எஸ்) XZ+ (S) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் ஓ (எஸ்) XZ+ O (S) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில் இரண்டு சிலிண்டர்கள் செட்-அப் வழங்கப்பட்டிருப்பதாக கூறி இருந்தோம்.

ஒவ்வொன்றும் 30 லிட்டர் கொள்ளவு திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் ஒற்றை சிலிண்டர் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், டாடா அல்ட்ராஸில் டூயல் சிலிண்டர் செட்-அப் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் பகுதியில் போதி அளவு இட வசதி இருக்க வேண்டும் என்பது மட்டுமே காரணமாகும்.

Tata altroz icng launched interior

அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் பூட் ஸ்பேஸ் 210 லிட்டர் ஆகும். அதேவேளையில், சிஎன்ஜி அல்லாத அல்ட்ராஸின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டர் ஆகும். சிஎன்ஜி சிலிண்டர்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் பெரிய அளவு பூட் ஸ்பேஸ் (Boot Space) அக்கார் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதுதவிர, அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் கொண்ட 7.0 அங்குல தொடுதிரை, ஏர் ப்யூரிஃபையர், ஒயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் என எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Tata altroz icng sunroof

டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் சிஎன்ஜியிலும், பெட்ரோலிலும் ஓடும். சிஎன்ஜியில் இயங்கும்போது 72.5 பிஎச்பி மற்றும் 103 என்எம் டார்க்கை மட்டுமே வெளிப்படுத்தும். அதுவே, பெட்ரோல் மோடில் அதிகபட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

Tata altroz icng rear profile

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இக்காரில் பாதுகாப்பு வசதிகளும் மிக தாரளமாக இடம் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், டூயல் ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், ரியர் பார்க்கிங் கேமிரா என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸ் அதன் ஐசிஎன்ஜி கார் மாடலை டூயல் சிலிண்டர், சன்ரூஃப் ஆகிய வசதிகளுடன் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 22, 2023, 17:07 [IST]
English summary
Tata altroz icng launched with sunroof feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X