இன்சூரன்ஸ் கிளைம் அப்ரூப் ஆக ஸ்மார்ட் போன் இருக்கனுமா? இது என்னடா புது புரளியா இருக்குது?
ஒரு வாகனத்திற்கு இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். வாகனம் சாலையில் செல்லும் போது எப்பொழுது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை இந்த இன்சூரன்ஸ் காப்பாற்றும். இதற்காகத் தான் அரசும் வாகனங்களுக்க இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற விதியை வைத்திருக்கிறது.
இது எல்லாம் இன்சூரன்ஸ் குறித்த பொதுவான தகவல்கள் ஆனால் ஒரு விபத்து நடந்துவிட்டால் அதற்காக இன்சூரன்ஸ் விண்ணப்பித்து அதைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஏராளமான ஃபார்மாலிட்டிகள் இருக்கிறது. சமீபத்தில் ஒரு நூதன காரணத்திற்காக ஒருவருக்கு இன்சூரன்ஸ் மறுக்கப்பட்டது குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது.

சமீபத்தில் Nikhil Rana என்ற யூடியூப் சேனலில் ஒருடாடா அல்ட்ராஸ் காரின் உரிமையாளர் அவரது காருக்கான இன்சூரன்ஸ் பெறுவதில் சந்தித்த சிக்கல் குறித்து வீடியோ வெளியாகியிருந்தது. இதை அடிப்படையாக வைத்து கார் டாக் தளம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி டாடா அல்ட்ராஸ் காரின் உரிமையாளர் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இன்சூரன்ஸை எடுத்துள்ளார்.
அவர் கார் வாங்கும் போது ஷோரூமிலேயே இந்த இன்சூரன்ஸை வாங்கினாரா அல்லது ஆன்லைன் மூலம் வாங்கினாரா என் தகவல் தெரியவில்லை எனவும், அந்த டாடா அல்ட்ராஸ் கார் விபத்தில் சிக்கிதாகடும் இதில் காரின் முன்பக்க பானட் உள்ளிட்ட பல பாகங்கள் சேதமானதாகவும், இதற்கான செலவை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கிளைம் செய்ய நினைத்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அப்படி செய்யும் போது குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி விபத்தில் சிக்கிய வாகனத்தைச் சோதனையிட வந்த போது உரிமையாளரின் கூகுள் டைம் லைன் தகவல்களைக் கேட்டதாகவும், டைம்லைன் இல்லாததால் இன்சூரன்ஸ் கிளைம் வழங்க முடியாது எனக் கூறி சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவிலும் அதுவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி பெரும் விவாதத்திற்குள்ளானது இன்சூரன்ஸ் வழங்காமல் இருக்கக் கூகுள் டைம்லைன் தகவல்கள் கட்டாயமாக வேண்டுமா எனப் பலர் பேசினர். இந்நிலையில் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் கார்டாக்கை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் கிளைம் வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறியுள்ளது. அதையும் கார்டாக் வெளியிட்டிருந்தது.
இப்படியாக இன்சூரன்ஸ் வாங்கும் போது அது சுலபமாகத் தான் இருக்கும் ஆனால் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் போது பல்வேறு காரணங்களைக் கூறி அந்த கிளைம் நிராகரிக்கப்படலாம். பலருக்கு இப்படியெல்லாம் விதிகள் இருக்கிறதா என்பது கூட தெரியாமல் கிளைம் சமயத்தில் திண்டாடுவார்கள்.
இந்த பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பற்றி முற்றிலும் தெரிந்து கொள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ அமைப்பின் வெப்சைட்டில் அதற்கான தகவல்கள் இருக்கிறது அதை செக் செய்து கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications