மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) சமீபத்தில் நடைபெற்றது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ராஸ் (Altroz) மற்றும் பன்ச் (Punch) ஆகிய மிகவும் பிரபலமான கார்களின் சிஎன்ஜி (CNG) வெர்ஷன்களை காட்சிக்கு வைத்திருந்தது.

நடப்பு 2023ம் ஆண்டில் இவை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டியாகோ (Tiago), டிகோர் (Tigor) மற்றும் டியாகோ என்ஆர்ஜி (Tiago NRG) ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களும் வெகு விரைவில் இணையவுள்ளன. இந்த 2 புதிய மாடல்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!

இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்!

டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய சிஎன்ஜி கார்களில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 77 ஹெச்பி பவர் மற்றும் 97 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும். இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

மாருதிக்கு செக்!

டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய சிஎன்ஜி கார்கள், நேரடியாக சிஎன்ஜி மோடிலேயே ஸ்டார்ட் செய்ய கூடியதாக இருக்கும். இந்திய சந்தையில் மாருதி பலேனோ சிஎன்ஜி (Maruti Baleno CNG) மற்றும் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG) ஆகிய கார்களுடன், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் போட்டியிடும். டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், ரியர் ஏர் கண்டிஷனிங் வெண்ட்கள், முன் பகுதியில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!

டாடா பன்ச் சிஎன்ஜி தனிக்காட்டு ராஜா!

ஆனால் டாடா பன்ச் சிஎன்ஜி காருக்கு, தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் நேரடியாக எந்த மாடலும் போட்டியாக இல்லை. எனினும் ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டில் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய மாடல் சிஎன்ஜி ஆப்ஷனுடன் வந்தால், அது டாடா பன்ச் சிஎன்ஜி காருக்கு போட்டியாக அமையும்.

மைலேஜ்!

பொதுவாக சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் இன்ஜின்கள் அதிக மைலேஜை வழங்கும். எனவே டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களும் மைலேஜை வாரி வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மைலேஜை வழங்க கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் அல்லது மைக்ரோ எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இவை மிக சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

5 ஸ்டார்!

டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றவை ஆகும். எனவே அதிக மைலேஜ் உடன் பாதுகாப்பான காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கும் இவை மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

முதலில் வருகிறது பன்ச் எலெக்ட்ரிக்!

இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் எல்லாம், டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கின்றன. ஏற்கனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ள நிலையில், இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார்களின் வருகையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பலம் சேர்க்கும்.

Most Read Articles
English summary
Tata altroz punch cng india launch details
Story first published: Saturday, January 21, 2023, 20:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X