மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!

2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஹாரியர் எலெக்ட்ரிக் கார் (Harrier EV), சியாரா எலெக்ட்ரிக் கார் (Sierra EV) என ஏராளமான கார்களை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

இவை தவிர, ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் அல்ட்ராஸ் (Altroz) மற்றும் பன்ச் (Punch) ஆகிய கார்களின் சிஎன்ஜி (CNG) வெர்ஷன்களும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அரங்கை அலங்கரித்து கொண்டிருந்தன. இந்த 2 சிஎன்ஜி கார்களும் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற ஆவல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கேள்விக்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது.

மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!

இவ்ளோ சீக்கிரம் வரப்போகுதா!

ஆம், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மற்றும் டாடா பன்ச் சிஎன்ஜி ஆகிய 2 கார்களும் வரும் ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மற்றும் டாடா பன்ச் சிஎன்ஜி ஆகிய 2 கார்களிலும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் சிஎன்ஜி மோடில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 பிஹெச்பி பவரையும், 97 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும்.

மைலேஜ் தாராளமா கிடைக்கும்!

பவர் அவுட்புட் சற்று குறைகிறதே என கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். ஏனெனில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மற்றும் டாடா பன்ச் சிஎன்ஜி ஆகிய 2 கார்களும் மைலேஜை வாரி வழங்க கூடியதாக இருக்கும். இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை மிகவும் அதிகமாக உள்ளதால், நல்ல மைலேஜ் வேண்டும் என்பதற்காக சிஎன்ஜி கார்களை நோக்கி பலர் ஓடி கொண்டுள்ளனர். இதன் காரணமாகதான் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சிஎன்ஜி கார்களை களமிறக்கி கொண்டுள்ளன.

மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!

மாருதியுடன் மல்லுக்கட்ட போகும் டாடா!

இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கை ஓங்கியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பெரும்பாலான கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. அதற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில்தான் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து இன்னும் நிறைய சிஎன்ஜி கார்களை எதிர்பார்க்கலாம்.

இவ்ளோ வசதிகளை தரப்போறாங்களா!

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் ஹார்மன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, எல்இடி டிஆர்எல்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் என ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் டாடா பன்ச் சிஎன்ஜி காரிலும் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே அதிக வசதிகளுடன், சிறப்பான மைலேஜூம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மற்றும் டாடா பன்ச் சிஎன்ஜி ஆகிய கார்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம்.

டாடான்னாலே பாதுகாப்புதான!

அத்துடன் டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றவை என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். எனவே இந்த கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்க கூடியவையாக இருக்கலாம். இந்த 2 கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களையும் ஓரளவிற்கு குறைவான விலையில் களமிறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata altroz punch cng india launch new details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X