அதிக வேகமாக பயணிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்க? வேற லெவல் திறனை வெளிப்படுத்தும் டாடா அல்ட்ராஸ் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் அதன் அல்ட்ராஸ் ரேசர் எடிசன் காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸின் மிக முக்கியமான தயாரிப்புகளில் அல்ட்ராஸும் ஒன்று. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலாகும். இந்த காரின் புதிய சிறப்பு எடிசனையே டாடா இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. நேற்றைய (ஜனவரி 11) தினம் நடைபெற்ற இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023 யிலேயே சிறப்பு பதிப்பாக உருவாக்கப்பட்டு இருக்கும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரை டாடா காட்சிப்படுத்தியது.

டாடா

அல்ட்ராஸ் ரேசர் எடிசன்

அல்ட்ராஸ் ரேசர் எடிசன் (Tata Altroz Racer) எனும் பெயரிலேயே அந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. நேற்றைய தினம் டாடா மோட்டார்ஸ் பன்முக கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தியது. யாருமே சற்றும்கூட எதிர்பார்த்திராத ஹாரியர் இவி, சைரா இவி, அவின்யா, கர்வ் உள்ளிட்ட கான்செப்ட் மாடல்களை நேற்றைய தினம் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது. இவற்றுடனேயே அல்ட்ராஸ் ரேசர் மாடலையும் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

இந்த கார் மாடல்களை மட்டும் இல்லைங்க நிறுவனம் பஞ்ச் கார் மாடலின் சிஎன்ஜி வெர்ஷன் மற்றும் இதே அல்ட்ராஸின் சிஎன்ஜி வெர்ஷன் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், கனரக வாகனங்கள் சிலவற்றையும் டாடா, ஆட்டோ எக்ஸ்போ 2023இல் காட்சிப்படுத்தியது. தற்போது விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் கார் மாடலைக் காட்டிலும் முற்றிலும் கவர்ச்சிகரமான கார் மாடலாக அல்ட்ராஸ் ரேசர் உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா

வித்தியாசம் இருக்கு

குறிப்பாக வழக்கமான அல்ட்ராஸ் இடம் இருந்து பல மடங்கு இதன் உருவம் மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக காரின் வெளிப்புறத்தில் பல புதிய காஸ்மெட்டிக் அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இத்துடன் மெக்கானிக் அம்சத்திலும் சில மாற்றங்களை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது. வெளிப்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் புதிய வண்ணம் சேர்ப்பு மற்றும் அணிகலன் சேர்ப்பால் அல்ட்ராஸ் வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

சிறப்பு அம்சங்கள்

குறிப்பாக, கருப்பு நிற ரூஃப், ஸ்போர்ட்டி பிளாக் அலாய் வீல்கள், கருப்பு நிற ஹூட், குளாஸ்ஸி நிற ஓஆர்விஎம் உள்ளிட்டவையே காருக்கு அட்டகாசமான கவர்ச்சியை வழங்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர பன்முக ஸ்பெஷல் தொழில்நுட்ப கருவிகளையும் இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், வாய்ஸ் ஆக்டிவேட்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.

டாடா

மோட்டார் விபரம்

இதை எல்லாம் தாண்டி இந்த காரில் கூடுதல் சிறப்பு ஒன்று இருக்கின்றது. அது, டாடா அல்ட்ராஸ் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் என்பதே ஆகும். டாடாவின் இந்த அட்டகாசமான தயாரிப்பு இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில ஹூண்டாய் ஐ20 என்-லைனுக்கு செம்ம போட்டியாளனாக இருக்கும். அல்ட்ராஸ் ரேசர் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது வழக்கமான டாடா அல்ட்ராஸ் காரில் இடம் பெற்றிருக்கும் மோட்டாரைக் காட்டிலும் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் திறன் வெளிப்பாடு 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் ஆகும். இந்த மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அளவு அதிக திறனை டாடாவின் வேறு எந்த சிறிய கார் மாடலிலும் எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 13:31 [IST]
English summary
Tata altroz racer auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+