அதகளம் செய்ய போகும் டாடா! இப்படி ஒரு காரை களமிறக்குவாங்கனு கனவுல கூட நினைக்கல! தூக்கத்தை தொலைத்த ஹூண்டாய்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளதால், டாடா அல்ட்ராஸ் காரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இந்த சூழலில் அல்ட்ராஸ் காரின் விற்பனையை அதிகரிப்பதற்காக புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதகளம் செய்ய போகும் டாடா! இப்படி ஒரு காரை களமிறக்குவாங்கனு கனவுல கூட நினைக்கல! தூக்கத்தை தொலைத்த ஹூண்டாய்!
Image used for representation purpose only

பேரே ஸ்போர்ட்டியா இருக்கு!

டாடா அல்ட்ராஸ் ஸ்போர்ட் (Tata Altroz Sport) என்ற பெயரில், இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் வெகு விரைவில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில், டாடா அல்ட்ராஸ் ஸ்போர்ட் காட்சிக்கு வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மாடலுக்கு போட்டியாக, டாடா அல்ட்ராஸ் ஸ்போர்ட் விற்பனைக்கு வரவுள்ளது.

பவர்ஃபுல் இன்ஜின்!

டாடா அல்ட்ராஸ் ஸ்போர்ட் மாடலில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். டாடா நெக்ஸான் காரில் இடம்பெற்றுள்ள (Tata Nexon) 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான், டாடா அல்ட்ராஸ் ஸ்போர்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதகளம் செய்ய போகும் டாடா! இப்படி ஒரு காரை களமிறக்குவாங்கனு கனவுல கூட நினைக்கல! தூக்கத்தை தொலைத்த ஹூண்டாய்!
Image used for representation purpose only

லுக்!

டாடா அல்ட்ராஸ் காரின் மற்ற வேரியண்ட்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், புதிய ஸ்போர்ட் வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மற்ற வேரியண்ட்களுக்கும், இந்த புதிய வேரியண்ட்டிற்கும் டிசைனில் மாற்றங்கள் இருக்கும். இதன்படி பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். அத்துடன் புதிய அலாய் வீல்களும் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே டாடா அல்ட்ராஸ் ஸ்போர்ட் மாடலின் டிசைன் கவர்ச்சிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை (Price) 6.35 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் புதிய ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலையை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நாளில்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிக்கும்.

எலெக்ட்ரிக் அவதாரமும் எடுக்கிறது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரும் (Tata Altroz EV) காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2024ம் ஆண்டின் தொடக்கத்திலோ டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் ஓரளவிற்கு விலை குறைவான கார் என்பதால், இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால், ஓரளவிற்கு குறைவான விலையிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியும். எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 7, 2023, 13:58 [IST]
English summary
Tata altroz sport hyundai i20 n line rival to be showcased at 2023 auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+