ரூ.7 லட்சத்திற்குள் புதிய டாடா அல்ட்ராஸ் வேரியண்ட்!! ஹூண்டாய் செய்துள்ள சம்பவம் அப்படி... சன்ரூஃப் கிடைக்கும்!
டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) காரில் புதியதாக எக்ஸ்.எம் மற்றும் எக்ஸ்.எம் (எஸ்) வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அல்ட்ராஸின் மற்ற வேரியண்ட்களுடன் ஒப்பிகையில் இந்த புதிய வேரியண்ட்கள் எந்த அளவிற்கு சிறப்புமிக்கவை? இவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராகவும், சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடிய டாடா காராகவும் அல்ட்ராஸ் விளங்குகிறது. 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காருக்கு விற்பனையில் போட்டியாக ஹூண்டாயின் ஐ20 மற்றும் மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விளங்குகின்றன.

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸில் எக்ஸ்.எம் மற்றும் எக்ஸ்.எம் (எஸ்) என இரு புதிய வேரியண்ட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதில் எக்ஸ்.எம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.90 லட்சமாகவும், எக்ஸ்.எம் (எஸ்) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.35 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், எக்ஸ்.எம் (எஸ்) வேரியண்ட்டின் பெயரில் உள்ள எஸ் என்பது சன்ரூஃப்-ஐ குறிக்கிறது.
எக்ஸ்.எம் (எஸ்) வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் கிடைக்கும். இதன்மூலமாக, இந்தியாவில் குறைந்த விலையில் சன்ரூஃப் உடன் கிடைக்கும் காராக அல்ட்ராஸ் எக்ஸ்.எம் (எஸ்) விளங்கவுள்ளது. சன்ரூஃப்-ஐ தவிர்த்து எக்ஸ்.எம் (எஸ்) வேரியண்ட்டில் கிடைக்கும் அத்தனை அம்சங்களும் எக்ஸ்.எம் வேரியண்ட்டிலும் கிடைக்கும். அதேபோல், அல்ட்ராஸின் மற்ற வேரியண்ட்களில் கிடைக்கும் வசதிகளையும் இந்த புதிய வேரியண்ட்களில் பெறலாம்.
அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, எலக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய ORVM மற்றும் முழு வீல் கவர்களுடன் 16-இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. அல்ட்ராஸின் புதிய வேரியண்ட்கள் இரண்டையும் 1.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே பெற முடியும்.
அதேபோல் இந்த வேரியண்ட்களை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும். இந்த புதிய வேரியண்ட்கள் அல்ட்ராஸின் எக்ஸ்.இ மற்றும் எக்ஸ்.எம்+ வேரியண்ட்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய வேரியண்ட்களின் அறிமுகத்துடன், கீலெஸ் எண்ட்ரீ மற்றும் பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றையும் நிலையாக அனைத்து வேரியண்ட்களிலும் டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது.
அத்துடன், அல்ட்ராஸ் எக்ஸ்.எம்+ வேரியண்ட்டில் கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், மற்றும் புதிய டேஸ்போர்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு புதியதாக உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 16-இன்ச் ஹைப்பர் ஸ்டைல் சக்கரங்கள் மற்றும் ரியர் டீஃபாக்கர் முதலியவை வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டாடா அல்ட்ராஸில் புதியதாக இரு வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதற்கு ஹூண்டாய் எக்ஸ்டரின் சமீபத்திய அறிமுகமும் ஓர் முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் அல்ட்ராஸில் ரூ.7 லட்சத்திற்குள் மற்றொரு புதிய வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எக்ஸ்.எம் (எஸ்) வேரியண்ட்டின் மூலமாக சந்தையில் விலை குறைவான எலக்ட்ரிக் சன்ரூஃப் காரையும் டாடா கொண்டுவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








