டாடா கார்களின் விலையில் இவ்வளவு தள்ளுபடியா? விலை தரை மட்டத்துக்கு போனதால கூட்டம் கூட்டமா புக் பண்ண போறாங்க!
டாடா நிறுவனம் தனது கார்களுக்கு இந்த மே மாதம் சில தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. சில கார்களுக்கு ரூ35 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அவ்வப்போது தங்கள் விற்பனையை அதிகரிக்க மாதம் முழுவதும் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். அதன்படி தற்போது டாடா நிறுவனமும் தனது கார்களுக்கான மே மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. டாடா ஹாரியர், சஃபாரி, அல்ட்ராஸ், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. பஞ்ச் மற்றும் நெக்ஸான் கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை.

ஹாரியர் மற்றும் சஃபாரி: டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களுக்கு ரூ35 ஆயிரம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இரண்டு கார்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ25 ஆயிரமும், கார்பரேட் தள்ளுபடியாக ரூ10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா தனது ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் புதிய டார்க் எடிசன் காரை அடாஸ் தொழிற்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாரியர் கார் மார்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுடனும், சஃபாரி கார் 3 வரிசை சீட்டர் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருடன் களத்தில் போட்டிப் போட்டு விற்பனையாகிறது.
டாடா அல்ட்ராஸ்: டாடா அல்ட்ராஸ் காருக்கு இந்த மே மாதம் ரூ28 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியும், வேரியன்டை பொருத்து ரூ15 ஆயிரம் வரையில் கன்ஸ்யூமர் பெனிஃபிட்களையும், எக்ஸ் சேஞ்ச் போனஸாக ரூ10 ஆயிரமும் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர்: டாடா நிறுவனத்தின் ஒரே செடான் மாடல் கார் இது. இதற்கு ரூ33 ஆயிரம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாகவும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ10 ஆயிரம் வரை தள்ளுபடியும், கன்ஸ்யூமர் பெனிஃபிட்டாக பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்கு ரூ15 ஆயிரமும், மேனுவல் வேரியன்ட்டிற்கு ரூ20 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ: டாடா நிறுவனத்தின் சிறிய கார் இந்த டியாகோ இந்த காருக்கு ரூ30 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். அதன்படி கார்பரேட் தள்ளுபடியாக ரூ5 ஆயிரமும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ10 ஆயிரமும், கன்ஸ்யூமர் பெனிஃபிட்டாக ரூ20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வெர்ஷனிற்கு கன்ஸ்யூமர் பெனிஃபிட் ரூ10 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் தயாரிப்பார்கள் தங்கள் விற்பனையை அதிகப்படுத்த இப்படியாகத் தள்ளுபடிகளைக் கொடுப்பது வழக்கம் தான். கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் பட்ஜெட்டை குறைக்க முடியும். நீங்க கார் வாங்க போகிறீர்களா? இப்பவே டாடா காரை வாங்குங்க!


Click it and Unblock the Notifications









