நெக்ஸான் டீசல் எஞ்ஜின் தேர்வின் விலையும் இவ்ளோ கம்மிதானா! ஆஹா டீசல் கார் பிரியர்களை கையிலையே பிடிக்க முடியாது
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் (Facelift Nexon) கார் மாடலை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மோட்டார் ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.
ஆனால், அறிமுகத்தின்போது டர்போ பெட்ரோல் தேர்வின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. டீசல் மோட்டார் தேர்வின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே தற்போது நெக்ஸான் டீசல் தேர்வுகளின் விலையையும் டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது. ரூ. 11 லட்சமே நெக்ஸான் டீசல் ஆப்ஷனின் ஆரம்ப நிலை தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

நெக்ஸான் ப்யூர் எம்டி டீசல் தேர்வின் விலையே இதுவாகும். அதேவேளையில், உயர்நிலை தேர்வான நெக்ஸான் ஃபியர்லெஸ் பிளஸ் எஸ் டிடி தேர்விற்கு அதிகபட்சமாக ரூ. 15.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். டாடா நெக்ஸான் பெட்ரோல் ரூ. 8.09 லட்சத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.
இதன் அதிகபட்ச விலையே ரூ. 14.69 லட்சம் மட்டுமாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் புதிய நெக்ஸானை வேற லெவலில் அப்கிரேட் செய்திருக்கின்றது. உள் பக்கம் மற்றும் வெளி பக்கம் என அனைத்தையும் டாடா மாற்றி இருக்கின்றது. இந்த மாற்றம் மிகவும் ஹெவியானது என கூறலாம்.

ஆகையால், முன்பைக் காட்டிலும் தற்போது வேற லெவல் கவர்ச்சியான காராக புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் மாறி இருக்கின்றது. இதுதவிர, தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய யுஐ தொழில்நுட்பம், டிஜிட்டல் கன்சோல் என ஏகப்பட்ட அம்சங்களை டாடா மோட்டார்ஸ் இந்த காரில் சேர்த்திருக்கின்றது.
இதுதவிர, வாய்ஸ் அசிஸ்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளையும் இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இத்துடன், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஐஆர்ஏ 2.0 கார் இணைப்பு வசதி, ரிமோட் கார் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொழில்நுட்ப வசதிகளைப் போலவே பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் நம்மை மிரட்டும் வகையில் இருக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட் பெல்டு அணிந்திருப்பதை கண்டறியும் வசதிக் கொண்ட 3 பாயிண்ட் ரியர் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, சரவுண்ட் வியூவ் சிஸ்டம், முன் பக்க பார்க்கிங் சென்சார், பிளைண்ட் வியூவ் மானிட்டர் மற்றும் அவசர கால அழைப்பு வசதி உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்றது.
மோட்டாரை பொருத்த வரை 1.2 லிட்டர் டர்போசார்ஜட் ரெவட்ரோன் பெட்ரோல் மற்றும் 1.5 டர்போசார்ஜட் ரெவோடார்க் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளே ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானில் வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜினுடன் சேர்த்து நான்கு விதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மற்றும் ஆறு விதமான நிற தேர்வுகள் உள்ளிட்டவையும் புதிய நெக்ஸானில் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் இருக்கின்றது. இதன் விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டாடா இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அப்கிரேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








