சாரே கொல மாஸ்! புது டாடா காரின் பெயர் இதுதானா! இந்த பேருக்காகவே இந்தியால எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்க போறாங்க
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு கர்வ் (Tata Curvv) என்ற பெயரில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இது கான்செப்ட் மாடல் ஆகும்.
இதை தொடர்ந்து டாடா கர்வ் கான்செப்ட் மாடலின் ஐசிஇ (ICE) வெர்ஷன், நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற, இந்திய ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் மூலம் எலெக்ட்ரிக் மற்றும் ஐசிஇ (பெட்ரோல், டீசல்) என 2 வெர்ஷன்களிலும் டாடா கர்வ் கார் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் டாடா கர்வ் காரை பற்றிய மற்றொரு புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, டாடா கர்வ், தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே இருக்கிறது. இது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, டாடா அசூரா (Tata Azura) என்ற பெயரில் களமிறக்கப்படலாம் என்பதுதான் அந்த புதிய தகவல்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அசூரா என்ற பெயரை பதிவு செய்துள்ளது. இந்த புதிய பெயர், டாடா கர்வ் கான்செப்ட் மாடலுக்கு சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா கர்வ் கான்செப்ட் மாடல், டாடா அசூரா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

டாடா அசூரா எலெக்ட்ரிக் வெர்ஷனில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 30 kWh மற்றும் 40.5 kWh பேட்டரிகள் ஆகும். இவற்றை எங்கேயோ கேள்விபட்டதை போல் இருக்கிறதே என நீங்கள் நினைப்பது புரிகிறது.
ஆம், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரில், இந்த பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே பேட்டரி ஆப்ஷன்கள், டாடா அசூரா எலெக்ட்ரிக் காரிலும் அப்படியே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவற்றின் ரேஞ்ச் (Range) முறையே 325 கிலோ மீட்டர்கள் மற்றும் 465 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.
அதே நேரத்தில் தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் (Petrol Engine) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (Diesel Engine) இன்ஜின் ஆப்ஷன்கள்தான், டாடா அசூரா ஐசிஇ வெர்ஷனில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 120 ஹெச்பி மற்றும் 170 என்எம் ஆக இருக்கலாம். மறுபக்கம் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 115 ஹெச்பி மற்றும் 160 என்எம் ஆக இருக்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா அசூரா கார் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு தயாரிப்பு வெற்றி பெற வேண்டுமென்றால், பெயர் மிகவும் முக்கியம். அப்படி இருக்கும்போது, டாடா அசூரா என்ற பெயர் கம்பீரமாக உள்ளது. எனவே இந்த பெயரில், டாடா கர்வ் கான்செப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








