லோடு ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கையே மாறப்போகுது! எலெக்ட்ரிக் குட்டியானை டெலிவரி துவங்கியாச்சு

இந்தியாவிலேயே மிகப்பெரிய கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர் டாடா தான். இந்நிறுவனம் தற்போது தனது டாடா ஏஸ் வாகனத்தின் எலெக்ட்ரிக் வெர்ஷனிற்கான டெலிவரியை துவங்கிவிட்டது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் ஏஸ் என்ற கர்ஷியல் சிறிய ரக வாகனம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் இதை குட்டியானை எனச் செல்லமாக அழைப்பார்கள். டாடா நிறுவனம் இந்த மினி டிரிக்கின் எலெக்ட்ரிக் வெர்னை சமீபத்தில் உருவாக்கி அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்தை தற்போது டாடா நிறுவனம் இந்தியாவின் 10 முக்கியமான நகரங்களிலில் மட்டும் டெலிவரியை துவங்கியுள்ளது.

லோடு ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கையே மாறப்போகுது! எலெக்ட்ரிக் குட்டியானை டெலிவரி துவங்கியாச்சு

10 நகரங்களில் டெலிவரி

அதன்படி இந்த டாடா ஏஸ் இவி, டில்லி, புனே, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் முதற்கட்டமான தனது டெலிவரியை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக டாடா ஏஸ் இவியில் 25 வாகனங்களை இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு டெலிவரி செய்யவுள்ளது. எஃப்எம்சிஜி மற்றும் கொரியர் நிறுவனங்களான அமேசான், டெல்ஹீவெரி, டிஎச்எல், ஃபேட்எக்ஸ், ஃபிலிப்கார்ட், சேஃப்எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு டெலிவரி செய்யவுள்ளது.

இந்த டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வாகனம் கடந்த மே மாதம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அப்பொழுதே இந்தவாகனத்திற்கு அமேசான், பிக்பேஸ்கட், சிட்டி லிங்க், டாட், ஃபிலிப்கார்ட், லெட்ஸ் டிராஸ்போர்ட் எனப் பல நிறுவனங்களிலிருந்து 36 ஆயிரம் வாகனங்களுக்கான புக்கிங்கள் வந்து குவிந்தது. இந்த டாடா ஏஸ் இவி, இந்தியாவில் அதிக அட்வான்ஸான. புகை வெளியிடாத 4 சக்கர கமர்ஷியல் வாகனமாகும்.

லோடு ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கையே மாறப்போகுது! எலெக்ட்ரிக் குட்டியானை டெலிவரி துவங்கியாச்சு

திறன்!

டாடா நிறுவனம் இந்த டாடா ஏஸ் இவியில் முதன் முறையாக EVOGEN பவர் டெரைனை பயன்படுத்தியுள்ளது. இது முழு சார்ஜில் 154 கி.மீ ரேஞ்ச் தரும் என சான்றழிக்கப்பட்டுள்ளது. இதில் 36 பிஎச்பி திறன் கொண்ட 27 கிலோ வாட்ஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 130 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது மொத்தம் 208 க்யூபிக் அடி அளவாகக் கொண்டது. இது முழு லோடு உடன் மலைப் பாதைகளில் அசால்டாக ஏறும் என கூறபட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு டாடா நிறுவனம் முதன் முறையாகத் தனது ஏஸ் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் இதுவரை 20 லட்சம் டாடா ஏஸ் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் தான் டாடா நிறுவனம் தனது ஏஸ் வாகனத்தின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கியுள்ளது. இது மார்கெட்டில் ரூ9.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2023, 10:04 [IST]
English summary
TATA BEGINS ELECTRIC TATA ACE MINI TRUCK DELIVERY
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+