டாடா வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கதிகலங்கி போன வாடிக்கையாளர்கள்! என்ன இப்படி பண்ணீட்டாங்க!

இந்திய சந்தையின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) திகழ்கிறது. இந்த சூழலில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐசி இன்ஜின் பயணிகள் வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

அதாவது பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விலைகள் உயரவுள்ளன. இந்த விலை உயர்வு வரும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் விலையானது 1.2 சதவீதம் வரை உயரவுள்ளது. ஆனால் கார் மாடல்கள் மற்றும் அவற்றின் வேரியண்ட்களை பொறுத்து, இந்த விலை உயர்வு மாறுபடும்.

டாடா வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கதிகலங்கி போன வாடிக்கையாளர்கள்! என்ன இப்படி பண்ணீட்டாங்க!

காரணம் என்னப்பா?

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா பன்ச் (Tata Punch), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய ஐசி இன்ஜின் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு பாதிப்பு இல்லை!

இந்த கார்களின் விலைதான் வரும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து உயரவுள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. அவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை வாங்கவுள்ளவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.

டாடா வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கதிகலங்கி போன வாடிக்கையாளர்கள்! என்ன இப்படி பண்ணீட்டாங்க!

பேசாம எலெக்ட்ரிக் கார் வாங்கிடலாம்!

இன்னும் சொல்லப்போனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை வாங்கவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல்தான் நிலவுகிறது. ஏனெனில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலைகள் சமீபத்தில் குறைக்கப்பட்டிருந்தன. தெளிவாக சொல்வதென்றால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ப்ரைம் வேரியண்ட்களின் விலை 31 ஆயிரம் ரூபாய் வரையிலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேக்ஸ் வேரியண்ட்களின் விலை 85 ஆயிரம் ரூபாய் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளன.

இதுதான் காரணமா!

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் காரின் விலைகளை அறிவித்து, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் நேரடி போட்டியாகும். இந்த புதிய மாடலின் வருகை காரணமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் விலைகள் உயரவுள்ளது வாடிக்கையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிஎன்ஜி முயற்சி!

தற்போதைய நிலையில் இந்தியாவின் ஐசி இன்ஜின் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதை தொடர்ந்து சிஎன்ஜி கார் மார்க்கெட்டிலும், ஓரளவிற்கு சந்தை பங்கை பெற டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த சூழலில், அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) மற்றும் பன்ச் சிஎன்ஜி (Tata Punch CNG) ஆகிய சிஎன்ஜி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த சிஎன்ஜி கார்கள் எல்லாம் விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata car price hike check all details here
Story first published: Friday, January 27, 2023, 23:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X