மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் 47,987 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் வெறும் 40,777 கார்களை மட்டும்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதன் மூலம் உள்நாட்டு கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது. மறுபக்கம் நடப்பாண்டு ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 302 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 165 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் கார்கள் ஏற்றுமதியில் 83 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!

வளர்ச்சி... வளர்ச்சி... வளர்ச்சி!

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) நடப்பாண்டு ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 48,289 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 40,942 கார்களை மட்டும்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த கார் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதில், எலெக்ட்ரிக் கார் விற்பனையும் அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் கார்கள் என தனிப்பட்ட முறையில் கணக்கிட்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 4,133 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,982 எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இது 39 சதவீத வளர்ச்சி ஆகும்.

மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!

மயக்கமா... கலக்கமா!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான போட்டியாளர்கள் என்றால், அது மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய நிறுவனங்கள்தான் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த வளர்ச்சி, போட்டி நிறுவனங்களுக்கு எல்லாம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் காலங்களில் இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

எல்லாமே நல்ல கார் ஆச்சே!

தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா பன்ச் (Tata Punch), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய 3 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனையில் இருக்கின்றன.

சம்பவம் லோடிங்!

வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், பன்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுதான் இந்த எதிர்பார்ப்புகளுக்கு முக்கியமான காரணம்.

இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது செலுத்தி வரும் ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சரி நிகராக எந்த நிறுவனமும் போட்டியில் இல்லை. ஆனால் மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் (Mahindra XUV400 EV), டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata car sales report january 2023 india
Story first published: Wednesday, February 1, 2023, 23:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X