டாடா கார் வாங்கனும்னு ரொம்ப நாள் ஆசையா? ஆசையை நிறைவேற்றும் நேரம் வந்தாச்சு... இந்த ஜூலையில் காரை வாங்குங்க!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் குறிப்பிட்ட கார்களுக்கு 2023 ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, எந்தெந்த டாடா கார்களை இந்த ஜூலை மாதத்தில் வாங்குவதன் மூலம் சலுகைகளை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எந்தவொரு பொருளின் விற்பனையையும் ஊக்கப்படுத்த சலுகைகளும், தள்ளுபடிகளும் அவசியமாகும். இதில் ஆட்டோமொபைல் வாகனங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? கார்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம்கள் விற்பனையை அதிகரிக்க தனிப்பட்ட முறையில் சலுகைகளை அறிவிக்கும். அதாவது, அந்த சலுகைகளை அந்த குறிப்பிட்ட டீலர்ஷிப் மையத்தில் மட்டுமே பெற முடியும்.

tata cars discounts upto rs.50000

அத்தகைய டீலர்ஷிப் சலுகைகள் ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் சலுகைகளை அறிவிப்பது உண்டு. இந்த சலுகைகளை கார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து டீலர்ஷிப் ஷோரூம்களிலும் பெற முடியும். அந்த வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு ஜூலை மாதத்திற்காக அறிவித்த சலுகைகளை சமீபத்தில் பார்த்திருந்தோம்.

அந்த வரிசையில், இந்தியாவின் மற்றொரு முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் குறிப்பிட்ட கார்களுக்கு இந்த ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஜூலை மாதத்தில் டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.35,000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதில் ரூ.20,000 வரையிலான பணம் தள்ளுபடியும், ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸும் அடங்குகின்றன.

tata cars discounts upto rs.50000

இந்த சலுகைகள் அனைத்தும் சிஎன்ஜி அல்லாத டியாகோ வேரியண்ட்களுக்கு ஆகும். டியாகோ சிஎன்ஜி காரை வாங்குவோர் சற்று கூடுதலாக ரூ.45,000 வரையிலான சலுகைகளை இந்த ஜூலை மாதத்தில் பெற முடியும். இதில் ரூ.30,000 பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பிரேட் தள்ளுப்படி உள்ளிட்டவை அடங்குகின்றன.

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.23,000 வரையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் தலா ரூ.10,000 ஆகும். கார்ப்பிரேட் தள்ளுபடி ரூ.3,000. அல்ட்ராஸ் டீசல் காரை வாங்குவோருக்கும் இதே தொகையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் போனஸ் தான். ஆனால் ரூ.15,000 வரையில் பணம் தள்ளுபடியை பெறலாம்.

tata cars discounts upto rs.50000

டாடா டிகோர் செடான் காரின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பிரேட் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் டிகோர் பெட்ரோல் காரை இந்த ஜூலை மாதத்தில் வாங்குவோர் ரூ.35,000 வரையில் சலுகைகளை பெறலாம். டீசல் என்ஜின் உடன் டிகோர் கார் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஆனால் சிஎன்ஜி வெர்சனில் கிடைக்கிறது.

இருப்பதிலேயே அதிகப்பட்சமாக, டிகோர் ஐ-சிஎன்ஜி காருக்கு சுமார் ரூ.50,000 வரையில் சலுகைகள் இந்த மாதத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.35,000 பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பிரேட் தள்ளுபடி உள்ளிட்டவை அடங்குகின்றன. விலையுயர்ந்த டாடா கார்களான ஹெரியர் மற்றும் சஃபாரிக்கு தலா ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்பிரேட் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ரூ.3,000 மதிப்பிலான கார்ப்பிரேட் தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகியை போல், டாடா மோட்டார்ஸும் அதன் கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது என சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், டாடா மோட்டார்ஸ் அதன் சிஎன்ஜி கார்களுக்கு அதிக தள்ளுபடிகளுடன் சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, சுமார் ரூ.50,000 வரையில் டிகோர் ஐ-சிஎன்ஜி காருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பது உண்மையில் கவனிக்கத்தக்கக்கூடிய விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 11, 2023, 21:05 [IST]
English summary
Tata cars discounts upto rs 50000 july 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X