டாடா எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்! நடக்க கூடாதது எல்லாம் நடக்க போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களுக்கு (Cars) மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு (Safety) அதிக முன்னுரிமை வழங்கி வருவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா பன்ச் (Tata Punch), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.

Tata Punch

இதுதவிர டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் (Electric Cars) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களை வாங்குவதாக இருந்தால், உடனடியாக முன்பதிவு (Booking) செய்து விடுங்கள்.

ஏனெனில் அனைத்து கார்களின் விலையையும் உயர்த்துவதற்கு (Price Hike) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது திட்டமிட்டு வருகிறது. வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலைகளும் உயர்த்தப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 Tata Nexon

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இது குறித்த பரிசீலனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. எனவே கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஆண்டு தொடக்கத்தில் கார் நிறுவனங்கள் விலையை உயர்த்துவது வழக்கமான ஒன்றுதான். மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்கள் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தங்கள் கார்களின் விலைகள் உயர்த்தப்படும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன.

இதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது கார்களின் விலைகளை உயர்த்துவது தொடர்பான பரிசீலனையை தொடங்கியுள்ளது. மாருதி சுஸுகி, ஆடி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் இந்த முடிவு, புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையை சொல்லப்போனால் இது வெறும் ட்ரெய்லர் மட்டுமே. மெயின் பிக்சர் இனிமேல்தான் வரவுள்ளது. ஆம், ஜனவரி 1ம் தேதி நெருங்க நெருங்க இன்னும் பல்வேறு கார் நிறுவனங்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என நாங்கள் கருதுகிறோம். கார்களின் விலைகள் மட்டுமல்லாது, இரு சக்கர வாகனங்களின் (Two Wheelers) விலையும் உயர்த்தப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 13:03 [IST]
English summary
Tata cars price hike from january 1 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+